தோல்விக்கு எதிர்காலம் இல்லை: ஐஐடி மாணவரின் தற்கொலைக் கடிதத்தில் உருக்கம்

தோல்விக்கு எதிர்காலம் இல்லை என்று தற்கொலைக் கடிதம் எழுதிவைத்துவிட்டு, விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் ஹைதராபாத் ஐஐடி மாணவர் ஒருவர்.
தோல்விக்கு எதிர்காலம் இல்லை: ஐஐடி மாணவரின் தற்கொலைக் கடிதத்தில் உருக்கம்


தோல்விக்கு எதிர்காலம் இல்லை என்று தற்கொலைக் கடிதம் எழுதிவைத்துவிட்டு, விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் ஹைதராபாத் ஐஐடி மாணவர் ஒருவர்.

இந்த ஆண்டில் மட்டும் இந்த ஹைதராபாத் ஐஐடியில் நிகழும் இரண்டாவது தற்கொலை இதுவாகும்.

சங்கரரெட்டிப் பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீதர் ரெட்டி இது குறித்துக் கூறுகையில், மாணவர் மார்க் ஆன்ட்ரூ சார்லெஸ் (20) திங்கட்கிழமை இரவு 11 மணிக்கு தனது விடுதி அறைக்குச் சென்றுள்ளார். மறு நாள் காலை அவரை அறையைத் திறக்காததால் நண்பர்கள் அறைக் கதவை உடைத்து உள்ளேச் சென்று பார்த்தபோது, அறையில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

டிசைனிங்கில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வந்த மாணவர், சில நாட்களுக்கு முன்புதான் இறுதித் தேர்வை எழுவிட்டு, பிரசன்டேஷனுக்குத் தயாராகி வந்ததாக உடன் படித்த மாணவர்கள் கூறுகிறார்கள்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியைச் சேர்ந்த இந்த மாணவர் எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதத்தில், இறுதித் தேர்வில் நல்ல மதிப்பெண் கிடைக்காது என்று தெரிகிறது. தோல்விகளுக்கு எல்லாம் இந்த உலகில் இடமில்லை, எதிர்காலமில்லை என்று எழுதியுள்ளார்.

மன அழுத்தம் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கடிதத்தில், உங்களை கவலை அடையச் செய்வேன் என்று நான் நினைத்ததே இல்லை. உங்கள் அன்புக்கு நான் ஏற்றவன் இல்லை, நான் உங்கள் அனைவரையும் நேசித்தேன், எப்படி நீங்கள் என்னை நேசித்தீர்களோ அதேப்போல, நான் மிகுந்த கவலையில் இருக்கிறேன், அதனால்தான் இப்படி செய்து கொள்கிறேன் என்று உடன் படித்த நண்பர்களுக்கு எழுதியுள்ளார்.

மேலும், மிகச் சிறந்த பெற்றோராக இருந்ததற்கு நன்றி, ஆனால், மன்னித்துவிடுங்கள், எதற்கும் பயன்படாதவனாக ஆகிவிட்டேன் என்று பெற்றோருக்கும் கடிதத்தில் தனது மன்னிப்பைக் கோரியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com