மத்திய பட்ஜெட் 2019-20 ஹைலைட்ஸ்

கங்கை நதியில் சரக்கு போக்குவரத்தை 4 மடங்காக அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை
மத்திய பட்ஜெட் 2019-20 ஹைலைட்ஸ்
  • கங்கை நதியில் சரக்கு போக்குவரத்தை 4 மடங்காக அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை
  • அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 ட்ரில்லியன் டாலராக உயரும்: நிர்மலா சீதாராமன்
  • நடப்பாண்டில் நாட்டின் பொருளாதாரம் 3 டிரில்லியன் 
  • மாநிலங்கள் இடையிலான மின் தேவையை பூர்த்தி செய்ய ஒரே தேசம், ஒரே மின்தொகுப்பு திட்டம்
  • பிரிவு 124ன் கீழ் வைகோவுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் எம்பி ஆவதில் சிக்கல் இல்லை
  • ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கும் குறைவாக வா்த்தகம் செய்யும் சிறு, குறு வியாபாரிகளுக்கு பென்ஷன் திட்டம்
  • ஜி.எஸ்.டி பதிவு பெற்ற சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவி அளிக்க ரூ.350 கோடி
  • ரயில்வே துறையில் பயணிகள், சரக்கு போக்குவரத்தில் தனியார் பங்களிப்பு ஈடுபடுத்தப்படும்
  • விமானத்துறை, இன்சூரன்ஸ், ஊடகம் உள்ளிட்ட துறைகளில் அன்னிய முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை
  • 2022ஆம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் வசிக்கும் 1.9 கோடி குடும்பங்களுக்கு சொந்த வீடு 
  • அடுத்த 5 ஆண்டுகளில் 1.25 லட்சம் கிலோ மீட்டர் புதிய சாலைகள் அமைக்க இலக்கு
  • இஸ்ரோவின் வணிக ரீதியான செயல்பாடுகளுக்கு புதிய அமைப்பு தொடங்கப்படும்
  • தன்னார்வ நிறுவனங்களை 'செபி'யின் கீழ் பட்டியலிட நடவடிக்கை எடுக்கப்படும்
  • உதான் திட்டம் மூலம் சிறிய நகரங்களுக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவை
  • நாட்டில் புதிதாக 10 ஆயிரம் வேளான் உற்பத்தி குழுக்கள் உருவாக்கப்படும்
  • ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை
  • சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை ஆண்டுதோறும் நடத்த அரசு திட்டம்
  • மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும்
  • சபாநாயகருடன் துணை முதல்வர் ஒபிஎஸ், எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
  • எக்காரணம் கொண்டும் சேலம் உருக்காலையை தனியார் மயமாக்கக் கூடாது: ஸ்டாலின்
  • 2024ஆம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வசதி
  • 2019 அக்டோபர் மாதத்திற்குள் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நாடாக இந்தியா உருவெடுக்கும்
  • ஆராய்ச்சி துறையை ஊக்குவிக்க தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை உருவாக்கப்படும்
  • வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில - Study in India திட்டம்
  • பிரதான் மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 114 நாட்களுக்குள் வீடுகள் கட்டப்படுகின்றன
  • இதுவரை இந்திய தூதரங்கள் இல்லாத நாடுகளில் தூதரங்கள் திறக்கப்படும்
  • பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு குறைப்பு நடவடிக்கையை மத்திய அரசு தொடரும்
  • வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்படும்: நிர்மலா
  • போதுதுறை பங்கு விற்பனை மூலம் ரூ.1.05 லட்சம் கோடி நிதி திரட்ட திட்டம்
  • ஆண்டுக்கு ரூ.400 கோடி வரை வரவு-செலவு செய்யும் நிறுவனங்களுக்கு 25% வரி
  • தனி நபர் வருமானவரி உச்சவரம்பில் மாற்றமில்லை; இடைக்கால பட்ஜெட் அறிவிப்பு தொடரும்
  • மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை வரிவிலக்கு
  • பான் கார்டு இல்லாதவர்கள் ஆதார் கார்டு மூலமாகவே வருமானவரி தாக்கல் செய்யலாம்
  • வங்கிக்கணக்கில் ரூ.1 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கமாக எடுத்தால் 2% வரி விதிக்கப்படும்
  • ரூ.50 கோடி வரை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு வரி விதிக்கப்படாது
  • ரூ.5 கோடிக்கு மேல் வருவாய் உள்ளவர்களுக்கு 7% வரி
  • பனை பொருட்களுக்கு ஜிஎஸ்டி-யில் இருந்து வரிவிலக்கு
  • தங்கம் இறக்குமதி மீதான வரி 10%ல் இருந்து 12.5% ஆக அதிகரிப்பு
  • பெட்ரோல் மீதான செஸ் வரி ஒரு ரூபாய் உயர்வு: நீர்மலா சீதாராமன்
  • பார்வையற்றோரும் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் உள்ள ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.20 ஆகிய நாணயங்களை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் அறிமுகம் செய்கிறார்.
  • நேரடி வரி வசூலானது 78 சதவிகிதம் அதிகரித்துள்ளது
  • வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் அனைவருக்கும் மின்சார வசதி செய்து தரப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com