சுடச்சுட

  
  Minister_Nagesh_resigns

   

  காங்கிரஸின் 10 எம்எல்ஏக்கள், மஜதவின் 3 எம்எல்ஏக்கள் என 13 எம்எல்ஏக்கள் ராஜிநாமாவைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுவரும் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கூட்டணி அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. 

  சட்டப்பேரவையில் 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆதரவுடன் 119 எம்எல்ஏக்கள் ஆதரவைப் பெற்றிருந்த மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசின் பலம் தற்போது 105 ஆக குறைந்துவிட்டது. அதேநேரத்தில் பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

  இந்நிலையில், கடந்த மாதம் அமைச்சராக நியமிக்கப்பட்ட சுயேட்சை எம்எல்ஏ நாகேஷ், தனது அமைச்சர் பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார். கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலாவிடம் தனது ராஜிநாமா கடிதத்தை சமர்பித்தார். மேலும் மாநிலத்தின் நன்மைக்காக பாஜக-வுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai