2 நாட்களாக கர்நாடகாவில் நடப்பது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

2 நாட்களாக கர்நாடகாவில் நடப்பது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை என்று ப.சிதம்பரம் எம்பி குற்றஞ்சாட்டியுள்ளார்.
2 நாட்களாக கர்நாடகாவில் நடப்பது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

2 நாட்களாக கர்நாடகாவில் நடப்பது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை என்று ப.சிதம்பரம் எம்பி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் மாநிலங்களவையில் இன்று பேசியதாவது, 
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் - பாரதியாரின் பாடலை சுட்டிக்காட்டி மாநிலங்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்த நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு தெரிவித்தார். தற்போதைய நிதி அமைச்சர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது கூடுதல் மகிழ்ச்சி. 

நிதி ஒதுக்கீடு தொடர்பான விவரங்கள் பட்ஜெட் உரையில் இடம்பெறாதது ஏன்? 2020-ல் நாட்டின் வளர்ச்சி விகிதம் எவ்வளவு என்பதை அரசால் கணிக்க முடியவில்லை. நாட்டின் பொருளாதார கட்டமைப்பை சீர்திருத்தம் செய்வது தொடர்பான அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. 2 நாட்களாக கர்நாடகாவில் நடப்பது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை. 

முன்னதாக அரசில் ஸ்திரத்தன்மை அற்ற சூழல் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும். கர்நாடகா மற்றும் கோவாவில் பாஜகவின் செயல்பாட்டை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com