'என் தந்தை ஆணவக் கொலை செய்துவிடுவார்': பாதுகாப்பு கோரி பாஜக எம்எல்ஏ மகள் வழக்கு

தலித் இளைஞரை திருமணம் செய்துகொண்டதால் என் தந்தை எங்களை ஆணவக் கொலை செய்துவிடுவார் என்று உத்தரப் பிரதேச பாஜக எம்எல்ஏ மகள் சாக்ஷி் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாஜக எம்எல்ஏ ராஜேஷ் மிஸ்ரா
பாஜக எம்எல்ஏ ராஜேஷ் மிஸ்ரா


தலித் இளைஞரை திருமணம் செய்துகொண்டதால் என் தந்தை எங்களை ஆணவக் கொலை செய்துவிடுவார் என்று உத்தரப் பிரதேச பாஜக எம்எல்ஏ மகள் சாக்ஷி் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  

உத்தரப் பிரதேசம் பரேலி மாவட்டத்தில் உள்ள பிதாரி செயின்பூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேஷ் மிஸ்ராவின் மகள் சாக்ஷி். இவர் கடந்த 4-ஆம் தேதி அஜிதேஷ் குமார் எனும் தலித் இளைஞரை திருமணம் செய்துகொண்டார். 

இந்த நிலையில் சாக்ஷி் தனது கணவருடன் சேர்ந்து ஒரு விடியோவை வெளியிட்டார். அதில், "என்னையும், என் கணவரையும் பார்த்தால் எனது தந்தை கொலை செய்துவிடுவார். தலித் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞரை அவரது மகள் திருமணம் செய்து கொண்டது அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. என் தந்தையின் ஆட்கள் எங்களைத் தேடி வருகின்றனர்" என்று தெரிவித்துள்ளார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகியுள்ளது. 

இவர்கள் பாதுகாப்பு அளிக்கக் கோரி போலீஸாரிடம் முறையிட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், எழுத்துப்பூர்வமான புகார் அளிக்க வேண்டும் என்று போலீஸார் தரப்பில் தெரிவித்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில், சாக்ஷி் இன்று (வியாழக்கிழமை) அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 

"எனது தந்தை மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களால் எனக்கும், எனது கணவரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. எனக்கு 18 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. எனக்கு விருப்பமானவரை எந்த அழுத்தமும்மின்றி நான் திருமணம் செய்துள்ளேன். சாதியப் பிரச்னைகள் காரணமாக எனது தந்தை இந்த திருமணத்தை எதிர்த்தார். மேலும், பரேலி காவல் துறையினர் எனது தந்தையின் அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர்" என்று குறிப்பிட்டுள்ளார். இவரது மனுவை உயர்நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. 

அதேசமயம், பாஜக எம்எல்ஏ ராஜேஷ் மிஸ்ராவும் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,  

"கட்சிப் பணி மற்றும் உறுப்பினர் சேர்ப்பு பணிகள் காரணமாக நான் பிஸியாக இருந்தேன். எனது மகளுடன் நான் ஒரு வார்த்தைக் கூட சொல்லவில்லை. இந்த குற்றாச்சாட்டுகள் பொய்யானது. தலித் இளைஞர் அஜிதேஷ் குமாரை திருமணம் செய்துகொண்டதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனக்கு இருக்கும் முக்கியமான பிரச்னை, அந்த இளைஞர் எனது மகளைவிட 9 வயது மூத்தவன். அவருக்கு பெரிதாக வருமானம் இல்லை. ஒரு தந்தையாக எனது மகளின் எதிர்காலம் குறித்து கவலையடைந்தேன். அவர்கள் வீடு திரும்ப வேண்டும்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com