ஜாலியாகப் பேசிக் கொண்டிருக்க வேண்டுமா? வெளியே செல்லுங்கள்! மக்களவை சபாநாயகர் உத்தரவு

ஜாலியாகப் பேசிக் கொண்டிருக்க வேண்டுமா? வெளியே செல்லுங்கள்! என்று கல்லூரியிலோ, பள்ளியிலோ ஆசிரியர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். இதே சம்பவம் மக்களவையில் நடந்துள்ளது.
ஜாலியாகப் பேசிக் கொண்டிருக்க வேண்டுமா? வெளியே செல்லுங்கள்! மக்களவை சபாநாயகர் உத்தரவு


புது தில்லி : ஜாலியாகப் பேசிக் கொண்டிருக்க வேண்டுமா? வெளியே செல்லுங்கள்! என்று கல்லூரியிலோ, பள்ளியிலோ ஆசிரியர்கள் சொல்லிக் கேட்டிருப்போம். இதே சம்பவம் மக்களவையில் நடந்துள்ளது.

மக்களவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஓம் பிர்லா, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவையில் இருக்கும் போது மிக ஒழுக்கமாக இருக்க வலியுறுத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று மக்களவையில் அவை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்த போது, அதைக் கவனிக்காமல் சொந்தக் கதை பேசிக் கொண்டிருந்த எம்.பி.க்களை கூப்பிட்டு, அவை நடவடிக்கைகளை கவனிக்காமல் பேசிக் கொண்டிருப்பதை ஏற்க முடியாது என்று கூறினார்.

முன்னதாக கடந்த வாரம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலை கண்டித்த அவைத் தலைவர் ஓம் பிர்லா, அவைத் தலைவரின் பணியை நீங்கள் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், நேற்று அவை நடவடிக்கைகளை கவனிக்காமல் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்த எம்பிக்களை நோக்கி, "சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து கொண்டும், சிலர் ஆங்காங்கே நின்று கொண்டும் பேசிக் கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. இது அவை. நீங்கள் நினைப்பது போலத்தான் அவையை நடத்த வேண்டும் என்றால் அதற்கும் நான் தயார். ஆனால், அது சரியா?" என்று பிர்லா கேள்வி எழுப்பினார்.

மேலும், மக்களவையில் எம்.பி.க்கள் பேசிக் கொண்டிருப்பதை ஒருகாலும் நான் அனுமதிக்க மாட்டேன். நாடாளுமன்ற வளாகத்தின் வெளிப்புறம் இரண்டு அடி எடுத்து வைத்தால் வந்துவிடும். ஒரு வேளை உங்களுக்கு பேச வேண்டும் என்றால் வளாகத்துக்குச் சென்றுவிடுங்கள் என்று கூறினார். இதற்கு சில உறுப்பினர்கள் வரவேற்பு அளித்தனர்.

திரிணாமூல் எம்பி சுதீப் கூறுகையில், பிர்லா மிகவும் கண்டிப்புடன் இருக்கிறீர்கள், எம்.பி.க்களின் இந்த பழக்கத்தை அவ்வளவு எளிதில் மாற்றிக் கொள்ள முடியாது என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com