காஷ்மீர் பிரச்னை குறித்து இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்வு காண வேண்டும் என தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா வியாழக்கிழமை தெரிவித்தார்.

ஸ்ரீநகர் மக்களவை தொகுதியின் எம்பியான அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: காஷ்மீர் தொடர்பான தகராறு இருநாடுகளுக்கும் (இந்தியா-பாகிஸ்தான்) இடையே நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இந்த விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையில் இன்னும் உள்ளது. ஐ.நா. பார்வையாளர்கள் இருநாடுகளுக்கும் ஆதரவாகவே உள்ளனர்.
எனவே, இந்த பிரச்னையை தீர்க்க வேண்டும் எனில் இருநாடுகளும் ஒன்றுக்கொன்று மனம்விட்டு பேசவேண்டும். இந்தியா காஷ்மீர் பகுதி மக்களுடனும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களுடனும் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும். இதைத் தவிர, காஷ்மீர் விவகாரத்தை தீர்க்க வேறு வழியில்லை. ராணுவ நடவடிக்கையால் எதையும் சாதிக்க முடியாது என்றார் அவர்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com