வாக்களிப்பதை கட்டாயமாக்கும் திட்டமில்லை: மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்

தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் திட்டமேதும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், மாநிலங்களவையில்
வாக்களிப்பதை கட்டாயமாக்கும் திட்டமில்லை: மாநிலங்களவையில் அமைச்சர் தகவல்


தேர்தலில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்கும் திட்டமேதும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், மாநிலங்களவையில் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில், வாக்களிப்பதை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்றார்.
முன்னதாக, கடந்த 2015-ஆம் ஆண்டு தேர்தல் சீர்திருத்தத்துக்கான பரிந்துரையின்போது வாக்களிப்பதை கட்டாயமாக்குவது குறித்து பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இது நடைமுறை சாத்தியமற்றது என்று கூறி சட்ட ஆணையம் நிராகரித்துவிட்டது.அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது 67.11 சதவீத வாக்குகள் பதிவாயின. இது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாகும். இதில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 65.95 சதவீத வாக்குகள் பதிவாயின.
நீதிபதிகள் நியமனம்: தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு வழிமுறைகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமன நடைமுறையில் மாற்றம் கொண்டு வர வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கும் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் எழுத்துமூலம் பதிலளித்தார். அதில், நீதிபதிகள் நியமனம் தொடர்பான இப்போதைய கொலீஜியம் பரிந்துரை நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com