ஆர்.எஸ்.எஸ். பணிக்கு திருப்பி அனுப்பப்பட்டார் ராம்லால்

பாஜக பொதுச் செயலாளராக 13 ஆண்டுகள் பதவி வகித்த ராம்லால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பணிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

பாஜக பொதுச் செயலாளராக 13 ஆண்டுகள் பதவி வகித்த ராம்லால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பணிக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
 பாஜகவில் தேசியத் தலைவர் பதவிக்கு அடுத்து மிகவும் அதிகாரம் கொண்டதாக பொதுச் செயலாளர் பதவி கருதப்படுகிறது. அந்தப் பதவியில் கடந்த 2006-ஆம் ஆண்டு ராம்லால் நியமிக்கப்பட்டார். அதையடுத்து கடந்த 13 ஆண்டுகளாக பாஜக பொதுச் செயலாளராக அவர் பதவி வகித்து வந்தார்.
 இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தகவல் தொடர்புப் பிரிவு துறை தலைவர் அருண் குமார் கூறுகையில், "ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரத சம்பர்க் பிரமுகராக ராம்லால் நியமிக்கப்பட்டுள்ளார்' என்றார்.
 இதே பதவியை ராம்லால் இதற்கு முன்பும் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பணிக்கு ராம்லால் திருப்பி அனுப்பப்பட்டதை அடுத்து, அவர் வகித்து வந்த பதவியில் கூடுதல் பொதுச் செயலாளராக இருந்த சதீஷ் நியமிக்கப்படலாம் எனத் தெரிகிறது. சதீஷும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பின்னணியில் இருந்து வந்தவர்தான்.
 முன்னதாக, கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கக் கோரி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவிடம் ராம்லால் இருமுறை கோரிக்கை விடுத்திருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com