சித்து ராஜிநாமா விவகாரம் குறித்து இன்று முடிவு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

மாநில அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த நவ்ஜோத் சிங் சித்துவின் விவகாரத்தில் புதன்கிழமை முடிவு செய்யப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.
சித்து ராஜிநாமா விவகாரம் குறித்து இன்று முடிவு: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்


மாநில அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த நவ்ஜோத் சிங் சித்துவின் விவகாரத்தில் புதன்கிழமை முடிவு செய்யப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்தார்.
இதுகுறித்து தில்லியில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறுகையில், தில்லியில் சில முக்கிய ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டியுள்ளது. புதன்கிழமை சண்டீகருக்கு செல்கிறேன். சித்துவின் ராஜிநாமா குறித்து அன்றைய தினம் முடிவு செய்வேன்' என்றார்.
பஞ்சாப் எம்.பி.க்களுடன் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அமரீந்தர் சிங் ஆலோசனையில் ஈடுபட்டார். பிரணீத் கௌர், மணீஷ் திவாரி, அமர் சிங், முகமது சித்திக், ஜஸ்பீர் சிங் கில் உள்ளிட்ட எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பின்னர், அமரீந்தர் சிங் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், பஞ்சாப் எம்.பி.க்களை நாடாளுமன்றத்தில் சந்தித்தேன். மாநிலத்தின் பல்வேறு முக்கிய பிரச்னைகளை நாடாளுமன்றத்தில் அவர்கள் எழுப்பி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், உள்ளாட்சி, சுற்றுலா மற்றும் கலாசார விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்து வந்தார் சித்து.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி அமைச்சரவையை முதல்வர் அமரீந்தர் சிங் மாற்றியமைத்தார். 
அப்போது, சித்துவிடம் இருந்த துறைகள் பறிக்கப்பட்டு, மின்சாரம் மற்றும் மரபு சாரா எரிசக்தித் துறை ஒதுக்கப்பட்டது.
அமரீந்தர் சிங்குடன் தொடக்கம் முதலே சித்து மோதல் போக்கை கடைப்பிடித்து வந்ததால் இந்த மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. சித்து மட்டுமில்லாமல் வேறு சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றியமைக்கப்பட்டன.
இந்நிலையில், தனது பதவியை சித்து திடீரென ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார். ராஜிநாமா கடிதத்தையும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்திக்கு அனுப்பி வைத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com