வங்கிகளின் வாராக்கடன் ரூ.9.34 லட்சம் கோடியாக குறைவு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

வங்கிகளின் வாராக்கடன் கடந்த நிதியாண்டைவிட ரூ.1.02 லட்சம் கோடி குறைந்து ரூ. 9.34 லட்சம் கோடியாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
வங்கிகளின் வாராக்கடன் ரூ.9.34 லட்சம் கோடியாக குறைவு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


வங்கிகளின் வாராக்கடன் கடந்த நிதியாண்டைவிட ரூ.1.02 லட்சம் கோடி குறைந்து ரூ. 9.34 லட்சம் கோடியாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
வங்கிகளின் வாராக்கடன் நிலை குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அதற்கு நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக செவ்வாய்க்கிழமை பதிலளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் அளவை குறைப்பதற்காக, பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் அளித்தது, நிதி மோசடியாளர்கள் மீண்டும் கடன் வாங்காத வகையில் தடை விதித்தது, கடன் வழங்குபவர் மற்றும் பெறுபவர் இடையேயான உறவில் மாற்றங்கள் கொண்டு வந்தது, திவாலான நிறுவனங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது என பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
நிதி மோசடியில் ஈடுபட்டவர்கள் அடங்கிய தகவல்கள்களை சேகரிக்கும் வகையில் மத்திய நிதி மோசடியாளர்கள் ஆவணம்' பராமரிக்கப்படுகிறது. அதில் உள்ள தகவல்கள் அவ்வப்போது வங்கிகளுக்கு அனுப்பப்படும். அதன் மூலம் நிதி மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு மீண்டும் கடன் வழங்குவது தடுக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகளால் வங்கிகளின் வாராக் கடன் அளவு குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கி அளித்த தரவின்படி, கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி, வங்கிகளின் வாராக்கடன் மதிப்பு ரூ.10.36 லட்சம் கோடியாக புதிய உச்சத்தை தொட்டது. 
இந்நிலையில், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால், வாராக்கடன் அளவு ரூ. 1.02 லட்சம் கோடி குறைந்து ரூ. 9.34 லட்சம் கோடியாக தற்போது உள்ளது.
ரூ. 50 கோடிக்கு மேல் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது, நிதி மோசடியாளர்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 4 நிதியாண்டுகளில் ரூ. 4.01 லட்சம் கோடி வாராக்கடன்கள் வசூலிக்கப்பட்டுள்ளன.
ரூ. 250 கோடிக்கு அதிகமாக கடன் பெறும் நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. வாராக்கடனை வசூலிப்பதற்காக, ஒரு முறை தீர்வு' திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடன்கள் அதிக அளவில் வசூலிக்கப்படுகின்றன.
கடந்த 2018-19 நிதியாண்டில் அதிக அளவில் மோசடி நடைபெற்ற வங்கிகள் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி முதலிடத்தில் உள்ளது. 
அதையடுத்து கோட்டக் மகிந்திரா வங்கியும், அதைத்தொடர்ந்து ஹெச்டிஎஃப்சி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை இடம் பெற்றுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com