உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக தமிழில் வெளியான தீர்ப்பு அதுவும்.. ராஜகோபாலின் வழக்கு

உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக தீர்ப்பின் விவரங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக தமிழில் வெளியான தீர்ப்பு அதுவும்.. ராஜகோபாலின் வழக்கு


புது தில்லி: உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக தீர்ப்பின் விவரங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் முறையாக தமிழில் வெளியான தீர்ப்பு எது தெரியுமா? இன்று சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்த சரவண பவன் உணவக உரிமையாளர் ராஜகோபால், நீதிமன்றத்தில் சரணடைய விலக்குக் கோரிய வழக்கின் தீர்ப்புதான் அது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட 9 பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, 113 வழக்குகளின் தீர்ப்புகள் அந்தந்த வழக்குகள் தொடர்புடைய மாநில மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் நேற்று ஆந்திர மாநிலம் தொடர்பான வழக்குகளின் தீர்ப்புகள் தெலுங்கு மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக இன்று சரவண பவன் உணவக உரிமையாளர்  ராஜகோபால் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விவரங்கள் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தொடர்புடைய ராஜகோபால், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, சிறைத் தண்டனையை சிறையில் கழிக்காமலேயே அவர் மரணம் அடைந்துவிட்டார். குற்றச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகும் நிலையில், அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. 

சமீபத்தில் ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து உடல்நிலையைக் காரணம் காட்டி ராஜகோபால் விலக்குக் கோரியிருந்தார். இதனை நிராகரித்த உச்ச நீதிமன்றம், உடனடியாக சரணடைய உத்தரவிட்ட தீர்ப்பின் விவரங்கள்தான் இன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com