அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் இறுதிப் பதிவேட்டை வெளியிட கால அவகாசம் நீட்டிப்பு

அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் இறுதிப் பதிவேட்டை வெளியிட ஜூலை 31ம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் இறுதிப் பதிவேட்டை வெளியிட கால அவகாசம் நீட்டிப்பு


புது தில்லி: அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் இறுதிப் பதிவேட்டை வெளியிட ஜூலை 31ம் தேதிக்கு பதிலாக ஆகஸ்ட் 31ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதே சமயம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருக்கும் 20 சதவீத பதிவுகளை மறுபரிசோதனை செய்யக் கோரி வைக்கப்பட்ட முறையீட்டையும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

அஸ்ஸாமில் உண்மையான இந்தியக் குடிமக்களை கண்டறிவதற்காக மத்திய அரசு கடந்த ஆண்டு தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான வரைவுப் பட்டியலை வெளியிட்டது. அதில், அஸ்ஸாம் மக்கள் தொகையில் 2.89 கோடி பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், சுமார் 40.70 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

விடுபட்டவர்களில் சுமார் 37.59 லட்சம் பேரின் பெயர்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், சுமார் 2.48 லட்சம் பேரின் பெயர்கள் நிலுவையில் வைக்கப்பட்டிருந்தன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இருக்கும் தவறான பதிவுகளைக் கண்டறிய அவகாசம் கோரி மத்திய மற்றும் அஸ்ஸாம் மாநில அரசும் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தன.

அந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, கால அவகாசத்தை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com