கேரளாவில் 'கள்ள உறவால்' புறக்கணிக்கப்பட்ட 'செல்ல' நாய்!

பொமரேனியன் வகை நாய் இருப்பதாக மிருக ஆர்வலர் ஷமீன் என்பவருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் 'கள்ள உறவால்' புறக்கணிக்கப்பட்ட 'செல்ல' நாய்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் சக்கய் எனுமிடத்தில் இயங்கி வரும் அங்கன்வாடியின் வெளியே 3 வயதான பொமரேனியன் வகை நாய் இருப்பதாக மிருக ஆர்வலர் ஷமீன் என்பவருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அங்கு வந்த ஷமீன், அந்த நாயை மீட்டபோது அதற்கு எவ்வித குறைபாடும் இன்றி ஆரோக்கியமாகவும், அன்புடன் இருப்பதைக் கண்டார். ஆனால், அதன் கழுத்தில் ஒரு கடிதம் இருப்பதைக் கண்டெடுத்து வாசித்ததில் அதிர்ச்சியடைந்தார். அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,

''இது சிறந்த வகை நாய். மிகவும் நல்லொழுக்கம் கொண்டது. அதிகளவில் உணவு எடுத்துக்கொள்ளும் பழக்கமும் கிடையாது. பால், பிஸ்கட் மற்றும் முட்டை ஆகியவற்றை விரும்பி சாப்பிடும்.

இதற்கு எந்த நோயும் இல்லை. 5 நாள்களுக்கு ஒருமுறை குளிக்க வைப்போம். அவ்வப்போது குறைக்கும் என்பது மட்டுமே சிறு குறை. அதிலும் கடந்த 3 ஆண்டுகளில் ஒருவரையும் கடித்தது கூட கிடையாது. 

ஆனால், வீட்டின் அருகில் மற்றொரு நாயுடன் கள்ள உறவு வைத்திருந்ததால் நாங்கள் இதனை புறக்கணித்துவிட்டோம்'' என்று அந்த கடிதத்தில் குறிப்பிடிருந்ததாகத் ஷமீன் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com