நக்ஸல் தாக்குதலால் மூடப்பட்ட பள்ளி 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறப்பு

நக்ஸல் பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பத்மூர் கிராமத்தின் பள்ளி 14 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை 24-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.
நக்ஸல் தாக்குதலால் மூடப்பட்ட பள்ளி 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறப்பு

சத்தீஸ்கரில் உள்ள பிஜபூர் மாவட்டத்தில் நக்ஸல் பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பத்மூர் கிராமத்தின் பள்ளி 14 ஆண்டுகளுக்குப் பின் ஜூலை 24-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. கடந்த 2005-06 ஆண்டில் இக்கிராம மக்கள் நக்ஸல்களுக்கு எதிராக போராடினர்.

அப்போது நக்ஸல்கள் நடத்திய தாக்குதலில் அங்கிருந்த மக்கள் அனைவரும் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். இதனால் 1964-ஆம் ஆண்டு முதல் அங்கு இயங்கி வந்த பள்ளியும் நக்ஸல்களால் மூடப்பட்டது.

2012-ஆம் ஆண்டிலிருந்து பத்மூர் கிராமத்துக்கு மீண்டும் திரும்பிய மக்கள், தங்களின் குழந்தைகளின் கல்வியின் எதிர்காலம் தொடர்பாக அவதிப்பட்டனர். 

இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் கிராமத் தலைவர் ஆகியோரது முயற்சியில் ஜூலை 24-ஆம் தேதி பள்ளி புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் மீண்டும் திறக்கப்பட்டது. 52 மாணவர்கள் இப்பள்ளியில் முதல்கட்டமாக சேர்க்கப்பட்டனர். 

மேலும் மாணவர்களுக்கு தேவையான பாடப்புத்தகங்கள், சீருடை, விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு, கல்வி தொடர்பான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. மதிய உணவு திட்டமும் அப்பள்ளியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆண்டுகளாக எங்கள் கிரமாத்து பிள்ளைகளின் கல்வியின் எதிர்காலம் தொடர்பாக மிகவும் அவதிப்பட்டோம். தற்போது இங்கு பள்ளி மீண்டும் திறக்கப்பட்டதுடன் எங்கள் கிராமம் புதுப்பொலிவு பெற்றுள்ளது என்று பத்மூர் கிராமத் தலைவர் சோமு மகிழ்ச்சி தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com