ஜூன் 15-இல் நிதி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டம்

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 5-வது நிர்வாகக் குழுக் கூட்டம் வரும் 15-ஆம் தேதி கூடுகிறது.
ஜூன் 15-இல் நிதி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டம்


பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 5-வது நிர்வாகக் குழுக் கூட்டம் வரும் 15-ஆம் தேதி கூடுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த ஆட்சியில் பொறுப்பேற்றதும், அதுவரை இருந்துவந்த மத்திய திட்டக்குழு என்னும் அமைப்பு கலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக 'நிதி ஆயோக்' அமைப்பு நிறுவப்பட்டது. இதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். 

நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் இதுவரை 4 முறை நடைபெற்றுள்ளது. முதல் கூட்டம் பிப்ரவரி 8, 2015-இல் கூடியது. இரண்டாவது கூட்டம் ஜூலை 15, 2015-இல் கூடியது. 

மூன்றாவது கூட்டம் ஏப்ரல் 23, 2017-இல் கூடியது. இந்தக் கூட்டத்தில் மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ஜூன் 17, 2018-இல் நடைபெற்ற நான்காவது நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 

இந்த நிலையில், நிதி ஆயோக்கின் 5-வது கூட்டம் வரும் 15-ஆம் தேதி நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமை வகிக்கும் இந்தக் கூட்டத்தில் நிதி ஆயோக் உறுப்பினர்களான அனைத்து மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள் சிலர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் சிலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கூட்டத்தில் நீர் மேலாண்மை, விவசாயம் மற்றும் மாவட்டங்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது. 

பிரதமர் மோடி, 2-வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் நிதி ஆயோக் நிர்வாகக் குழுக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com