பஞ்சாப் முதல்வர் அமரீந்தருடன் மோதல்: ராகுலை சந்தித்துப் பேசினார் அமைச்சர் சித்து

பஞ்சாப் முதல்வர் அமரீந்தருடன் மோதல் போக்கு நிலவும் நிலையில், பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, இன்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுலை சந்தித்துப் பேசினார்.
பஞ்சாப் முதல்வர் அமரீந்தருடன் மோதல்: ராகுலை சந்தித்துப் பேசினார் அமைச்சர் சித்து


சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் அமரீந்தருடன் மோதல் போக்கு நிலவும் நிலையில், பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, இன்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுலை சந்தித்துப் பேசினார்.

சுற்றுலா மற்றும் கலாசாரங்கள் துறை அமைச்சராக இருந்த சித்துவின் இலாகா மாற்றப்பட்டு மாநில மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தித்துறை இலாகா ஒதுக்கப்பட்ட நிலையில், இன்று காங்கிரஸ் கட்சித் தலைவரை சந்தித்து தனது கடிதத்தை அவரிடம் அளித்ததாகவும், சித்து டிவிட்டரில் கூறியுள்ளார்.

மேலும், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கட்சியின் மூத்தத் தலைவர் அகமது படேல் ஆகியோருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் சித்து, அமரீந்தர் சிங்குடன் கருத்து வேறுபாடு கொண்டிருக்கும் நிலையில், சுற்றுலா மற்றும் கலாசாரங்கள் துறை அமைச்சராக இருந்த சித்துவின் இலாகா மாற்றப்பட்டு மாநில மின்சாரம் மற்றும் மரபுசாரா எரிசக்தித்துறை இலாகாவை வியாழக்கிழமை ஒதுக்கீடு செய்தார் அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங்.

இலாகா மாற்றப்பட்ட பிறகு இதுவரை அந்தப் பொறுப்பை சித்து ஏற்கவில்லை.

இந்நிலையில், ஆலோசனைக்குழுக்கள் மூலம் அரசின் திட்டங்களை மேம்படுத்தவும், திட்டங்களை உரிய வகையில் நடைமுறைப்படுத்தவும், ஆய்வு மேற்கொள்ளவும் மாநில அரசு திட்டமிட்டது.

அதனப்டி, பஞ்சாப் மாநில அரசின் முக்கியத் திட்டங்களை வகுப்பதற்காக, அந்த மாநில முதல்வர் அமரீந்தர் சிங் 8 ஆலோசனைக் குழுக்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ள நிலையில், அதிலுள்ள எந்தக் குழுவிலும் அமைச்சர் நவ்ஜோத் சித்து இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com