பாகிஸ்தான் வான் எல்லையில் மோடியின் விமானம் பயணிக்காது: மத்திய வெளியுறவு விவகாரத் துறை

கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 
பாகிஸ்தான் வான் எல்லையில் மோடியின் விமானம் பயணிக்காது: மத்திய வெளியுறவு விவகாரத் துறை


கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். 

அதே சமயம், பிரதமர் நரேந்திர மோடி கிர்கிஸ்தான் செல்ல பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த மாட்டார் என்று மத்திய வெளியுறவு விவகாரத் துறை அமைச்ச செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வான்வெளியை தவிர்த்துவிட்டு, மோடி பயணிக்கும் விவிஐபி விமானம் ஓமன், இரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகள் வழியாக பிஷ்கேக் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் தங்கள் வான் பரப்பில் பரஸ்பரம் விமானங்களை அனுமதிப்பதில்லை. இந்நிலையில், கிர்கிஸ்தானில் வரும் 13, 14-ஆம் தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக மோடி அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். எனவே, அவரது விமானம், பாகிஸ்தான் வான் பகுதி வழியாக பறந்து செல்ல அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில், இந்திய அரசின் கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்றுக் கொண்டது.

ஆனால், பாகிஸ்தான் வான் எல்லையைப் பயன்படுத்துவதை தவிர்க்க மத்திய அரசு விரும்பியதால், மாற்று வழியில் மோடியின் விமானம் பயணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பாகிஸ்தானின் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் வான்பரப்பு முழுவதிலும் வெளிநாட்டு விமானங்கள் பறப்பதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. இதேபோல், இந்தியாவும் தனது வான்பரப்பில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்குத் தடை விதித்தது. அதன் பின்னர், இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளின் விமானங்களை இயக்குவதற்கு பாகிஸ்தான் அரசு கடந்த மார்ச் 27-ஆம் தேதி அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com