வெங்காய ஏற்றுமதிக்கான சலுகைகள் ரத்து!

வெங்காயத்தின் சந்தை விலை அதிகரித்துள்ளதால், அதை ஏற்றுமதி செய்வதற்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகளை மத்திய அரசு நீக்கியுள்ளது.
வெங்காய ஏற்றுமதிக்கான சலுகைகள் ரத்து!


வெங்காயத்தின் சந்தை விலை அதிகரித்துள்ளதால், அதை ஏற்றுமதி செய்வதற்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகளை மத்திய அரசு நீக்கியுள்ளது. உற்பத்திப் பொருள்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கில், சில பொருள்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு சலுகை அளித்து வருகிறது. அதன்படி, வெங்காய ஏற்றுமதியாளர்களுக்கு அதன் மொத்த விலையில் 10 சதவீத சலுகையை மத்திய அரசு அளித்து வந்தது.  
இந்நிலையில், வர்த்தகத் துறையின் கீழ் இயங்கி வரும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெங்காய ஏற்றுமதிக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகை திரும்பப் பெறப்படுகிறது. ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக முன்பு அளிக்கப்பட்டு வந்த 10 சதவீத ஏற்றுமதி சலுகை, முற்றிலும் திரும்பப் பெறப்படுகிறது. இந்த நடவடிக்கை உடனடியாக அமலுக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.
ஆசியாவின் மிகப் பெரிய கொள்முதல் சந்தையான மகாராஷ்டிரத்தின் லசால்கான் சந்தையில், கடந்த மாதம் கிலோவுக்கு ரூ.9 ஆக இருந்த வெங்காய விலை, இந்த மாதம் கிலோவுக்கு ரூ.13.30 ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் முக்கிய வெங்காய உற்பத்தி மாநிலங்களான மகாராஷ்டிரம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம் ஆகியவை வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால், வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சந்தைகளுக்குப் போதிய வரத்து இல்லாததால், வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.
இதைக் கருத்தில்கொண்டு, ஏற்றுமதிக்கான சலுகையை நீக்குவதன் மூலம், 50 ஆயிரம் டன் வெங்காயத்தைக் கிடங்கில் சேமித்து வைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன் மூலம், வரும் மாதங்களில் வெங்காய விலை அதிகரிக்காத வண்ணம் தடுக்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com