பாஜக தலைவராக அமித்ஷாவே தொடர்வார்: மாநிலத் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு? 

பாஜக தலைவராக அமித்ஷாவே தொடர்வார் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாஜக தலைவராக அமித்ஷாவே தொடர்வார்: மாநிலத் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு? 

புது தில்லி: பாஜக தலைவராக அமித்ஷாவே தொடர்வார் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது. இரண்டாவது முறையாக மோடி பிரதமரானார். அதையடுத்து பாஜகவின் மாநிலத் தலைவர்கள் மற்றும் தேசிய செயலர்கள் கலந்து கொண்ட கூட்டமானது தில்லியில் உள்ள பாஜகவின் தலைமையகத்தில் வியாழன் அன்று நடைபெற்றது. தமிழக பாஜக தலைவர் தமிழிசை உட்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துக்களாக கூறப்படுவையாவன:

மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்து 303 இடங்ளில் வெற்றிபெற்றிருந்தாலும், நாம் எதிர்பாராத அளவுக்கு இடங்கள் கிடைக்கவில்லை.   எனவே அதற்கு இன்னும் தீவிரமாக உழைக்க வேண்டும்.

விரைவில் தில்லி, பிகார், ஹரியாணா, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர் மற்றும் மஹாராஷ்டிரா ஆகிய ஆறு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மூன்று மாநிலங்களில் மட்டுமே பாஜக ஆட்சியில் உள்ளது.

எனவே பாஜகவின் கரங்களை வலுப்படுத்துவதற்காக பாஜக தலைவராக அமித்ஷாவே இன்னும் ஆறு மாதங்களுக்குத்  தொடர வேண்டும்.

இவ்வாறு பல்வேறு மாநிலத் தலைவர்களும் தேசிய செயலர்களும் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

பொதுவாக பாஜகவில் தேசிய தலைவர் பதவியில் ஒருவர் இரண்டு வருடங்கள் மட்டுமே நீடித்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அமித்ஷா உள்துறை அமைச்சராக பதவியேற்றவுடன், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா பாஜக தேசிய தலைவராக அறிவிக்கப்படுவார் என்று முன்னர் கூறப்பட்டு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com