2030-ஆம் ஆண்டு விண்வெளியில் ஆய்வு மையம்: இஸ்ரோ

வரும் 2030-ஆம் ஆண்டில் இந்தியா சார்பில் விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார்.
2030-ஆம் ஆண்டு விண்வெளியில் ஆய்வு மையம்: இஸ்ரோ


வரும் 2030-ஆம் ஆண்டில் இந்தியா சார்பில் விண்வெளியில் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார். இது முழுவதும் இந்தியத் தொழில்நுட்பத்தில் அமையும்; வெளிநாட்டு உதவிகள் ஏதும் நாடப்படாது என்றும் அவர் கூறினார்.
தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த சிவன் இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
விண்வெளியில் இந்தியா சார்பில் ஆய்வு மையம் அமைக்க வேண்டும் என்பது நமது விண்வெளி ஆய்வுத் துறையின் மிக உயர்ந்த இலக்குகளில் ஒன்று; அதனை வரும் 2030-ஆம் ஆண்டில் எட்ட முடிவு செய்துள்ளோம். இத்திட்டம் முழுமையாக இந்திய தொழில் நுட்பத்தில் மேற்கொள்ளப்படும். வெளிநாட்டுப் பங்களிப்பு ஏதும் இருக்காது.
இந்த விண்வெளி ஆய்வு மையம் 20 டன் எடை கொண்டதாக இருக்கும். இதில் விண்வெளி வீரர் 15 முதல் 20 நாள்கள் வரை தங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள முடியும். இப்போது அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே விண்வெளியில் ஆய்வு மையங்களை அமைத்துள்ளன. இது தவிர அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்துள்ளன. இந்த வரிசையில் இந்தியாவும் இணையும்.
வரும் ஜூலை 15-ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலம் நிலவுக்கு பயணத்தைத் தொடங்குகிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com