சுடச்சுட

  

  2020 முதல் நாடு முழுவதும் அரசுப் பள்ளியில் 9, 10ம் வகுப்புக்கும் மதிய உணவு திட்டம் நீட்டிப்பு

  By ENS  |   Published on : 14th June 2019 11:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  noon_meals for students


  புது தில்லி: 2020ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளியில் பயிலும் 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கும் மதிய உணவு திட்டம் நீட்டிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

  மத்திய மனித வளமேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொகாரியால் நிஷாங்க் தலைமையில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கூடுதலாக ரூ.4000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

  இந்த திட்டம் குறித்து ஜூன் 22ம் தேதி நடைபெறும் மாநில கல்வித் துறை அமைச்சர்களின் கூட்டத்திலும் ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai