14 மாதங்களில் ரூ.5,800 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்பனை

2018ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில்  நன்கொடைதாரர்களால் ரூ.5,800 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் பெறப்பட்டு, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக
14 மாதங்களில் ரூ.5,800 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்பனை

2018ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி முதல் 2019ஆம் ஆண்டு மே 10-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில்  நன்கொடைதாரர்களால் ரூ.5,800 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் பெறப்பட்டு, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலர் சந்திரசேகர் கெüடு என்பவரால் கோரப்பட்ட தகவலில் இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 
மொத்தம் ரூ.5,851.41 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், பெயர் குறிப்பிடாத நன்கொடையாளர்கள் என்ற வகையில் ரூ.1,407.09 கோடி மதிப்பிலான பத்திரங்கள் கடந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி வரை வாங்கப்பட்டு, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. 
ரூ.4,444.32 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் மே 10-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் பிரசாரம் மற்றும் வாக்குப்பதிவுக்கு இடைப்பட்ட காலத்தில் வாங்கி, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. 
மத்திய அரசு, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை தொடங்கியது. அதன்படி, பாரத ஸ்டேட் வங்கியின் 29 கிளைகளில் மட்டும் தேர்தல் பத்திரங்களின் விற்பனை 10 கட்டங்களாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com