பாஜக செயல் தலைவராக ஜெ.பி.நட்டா நியமனம்

பாஜகவின் செயல் தலைவராக அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா (58) நியமிக்கப்பட்டுள்ளார்.
பாஜக செயல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெ.பி.நட்டாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரதமர் மோடி, அமித் ஷா.
பாஜக செயல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெ.பி.நட்டாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பிரதமர் மோடி, அமித் ஷா.


பாஜகவின் செயல் தலைவராக அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா (58) நியமிக்கப்பட்டுள்ளார்.
தில்லியில் பாஜகவின் நாடாளுமன்றக் குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கட்சி சார்பான முக்கிய முடிவுகளை இந்தக் குழு மேற்கொள்ளும். இந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
அதன் பின்னர் பாஜக செயல் தலைவராக ஜெ.பி.நட்டா நியமிக்கப்படுகிறார் என்றும், பாஜக தேசிய தலைவராக அமித் ஷாவே தொடர்வார் என்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்தார்.
இதுதொடர்பாக கட்சி வட்டாரங்கள் கூறுகையில்,  மத்திய அமைச்சராகப் பொறுப்பேற்றாலும், கட்சியின் பணிகளையும் கண்காணிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகக் குழு கோரிக்கை விடுத்ததையடுத்து அமித் ஷா பாஜக தேசியத் தலைவராக தொடர்கிறார். அவரின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதம் முடிவடையவுள்ளது. கட்சியின் கொள்கைப்படி, ஒருவருக்கு ஒரு பதவி என்பதால், டிசம்பர் மாதத்துக்கு பின்னர் அமித் ஷாவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட மாட்டாது. பாஜக வரலாற்றில் முதல்முறையாக செயல் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது நாடாளுமன்றக் குழு செயலாளராக இருக்கும் நட்டா, கட்சி நிர்வாகத் தேர்தல் முடிவடையும் வரை செயல் தலைவராக நியமிக்கப்படுகிறார். அதன் பின்னர் தேசிய தலைவராக அவர் நியமிக்கப்படலாம் என்று தெரிவித்தன.
மாநிலங்களவை எம்.பி.யான நட்டா, முந்தைய பாஜக அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com