கொளுத்தும் வெயிலில் ரயிலில் பயணிக்கவிருக்கும் யானைகள்! எதற்கு? எங்கே?

ஜெகந்நாத் கோயிலில் நடைபெறும் ரத யாத்திரையில் பங்கேற்க அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து 4 யானைகள் ரயில் மூலம் அகமதாபாத்துக்கு பயணிக்க விருக்கின்றன.
கொளுத்தும் வெயிலில் ரயிலில் பயணிக்கவிருக்கும் யானைகள்! எதற்கு? எங்கே?


குவகாத்தி : ஜெகந்நாத் கோயிலில் நடைபெறும் ரத யாத்திரையில் பங்கேற்க அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து 4 யானைகள் ரயில் மூலம் அகமதாபாத்துக்கு பயணிக்க விருக்கின்றன.

என்ன ரயிலிலா? ஆம், அஸ்ஸாம் அரசு இதற்கான திட்டத்தை வகுத்துள்ளது.

சுமார் 3000 கி.மீ. தொலைவினை அனல் காக்கும் இந்த கோடை காலத்தில் வேறெந்த போக்குவரத்து வழித்தடத்தில் கொண்டு சென்றாலும் அது யானைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.

அஸ்ஸாம் மாநிலம் தின்சுகியா ரயில் நிலையத்தில் இருந்து ரயில்பெட்டி வேகான்களில் ஏற்றி 4 யானைகள் ரத யாத்திரையில் பங்கேற்கக் கொண்டு செல்லப்பட உள்ளது. அவ்வாறு வேகான்களில் ஏற்றப்படும் யானைகள் மீது அவ்வப்போது தண்ணீர் தெளிக்கப்படும் என்றும், கால்நடை மருத்துவர் ஒருவரும் உடன் இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

இதற்கு அஸ்ஸாம் மாநில அரசிடம் இருந்து ஒப்புதல் கடிதமும், குஜராத் அரசிடம் இருந்து தடையில்லாச் சான்றுகளும் கிடைத்துவிட்டன. இன்னமும் அதற்கான வேகான்களை ரயில்வே நிர்வாகம் அனுப்பி வைக்கவில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.

ஆனால், விலங்குகள் நல வாரியத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். கோடை வெயில் காலத்தில் யானைகளை வேகான்களில் அடைப்பது கொஞ்சமும் மனித நேயமற்ற செயல் என்று அவர்கள் கண்டித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com