ஹெச்-4 விசாவை ரத்து செய்வது தொடர்பான விதிமுறை உருவாக்கும் பணி நிறைவடையவில்லை : அமெரிக்கா

ஹெச்-4  நுழைவு இசைவை (விசா) ரத்து செய்யும் திட்டம் தொடர்பான விதிமுறை வகுக்கும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஹெச்-4 விசாவை ரத்து செய்வது தொடர்பான விதிமுறை உருவாக்கும் பணி நிறைவடையவில்லை : அமெரிக்கா


ஹெச்-4  நுழைவு இசைவை (விசா) ரத்து செய்யும் திட்டம் தொடர்பான விதிமுறை வகுக்கும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க குடிமக்கள் மற்றும் குடியேற்ற சேவைகள் துறை (யுஎஸ்சிஐஎஸ்) செய்தித் தொடர்பாளர் ஜெஸிகா கொலின்ஸ் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாவது:
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அடிப்படையிலான விசா திட்டங்கள் அனைத்தும் யுஎஸ்சிஐஎஸ் துறையால் தொடர்ந்து ஆய்வுக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. அதில், ஹெச்-4 விசாவும் அடங்கும்.
விதிமுறைகளை உருவாக்கும் நடைமுறை பணிகள் முழுமையடையும் வரையில், ஒபாமா நிர்வாகம், வாழ்க்கைத் துணை வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளித்த ஹெச்-4 விசா திட்டத்தை ரத்து செய்வது தொடர்பாக எந்த இறுதி முடிவையும் மேற்கொள்ள முடியாது.
அமெரிக்காவின் குடியேற்ற சட்டங்களை மேம்படுத்த யுஎஸ்சிஐஎஸ் உறுதிபூண்டுள்ளது. அமெரிக்கர்களின் வேலை வாய்ப்பு மற்றும் ஊதியம் ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.    
அமெரிக்காவில் ஹெச்-1பி விசா அடிப்படையில் வெளிநாட்டினர் ஏரளாமானோர் தங்கிப் பணியாற்றி வருகின்றனர்.குறிப்பாக,  தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ள திறன்மிகு பணியாளர்களுக்கு இந்த வகை விசா அதிக அளவில் வழங்கப்பட்டதில் இந்தியர்கள் அதிக அளவில் பயன் பெற்று வருகின்றனர். 
இந்த நிலையில், ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஹெச்-1பி விசா பெற்றவர்கள், தங்களது மனைவி அல்லது கணவரை ஹெச்-4 விசா அடிப்படையில் அமெரிக்காவுக்கு அழைத்து வரலாம்; அவர்களும் அமெரிக்காவில் பணியாற்றலாம் என்ற சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ்,  தற்போது ஆயிரக்கணக்கான இந்தியப் பெண்கள் 
அமெரிக்காவில் பணிபுரிந்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு,  ஹெச்-4 விசா திட்டம் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிப்பதாக கூறி இந்த திட்டத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக அறிவித்தார். ஆனால், அங்குள்ள எம்.பி.க்கள், தொழில் துறையினர்  ஆகியோர் அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com