அல்வா பூஜையுடன் தொடங்கியது பட்ஜெட் தயாரிப்பு பணி

2019-2020ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் தயாரிப்பு பணி, அல்வா தயாரிப்பு பூஜையுடன் தில்லியில் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது. 
அல்வா பூஜையுடன் தொடங்கியது பட்ஜெட் தயாரிப்பு பணி


2019-2020ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் தயாரிப்பு பணி, அல்வா தயாரிப்பு பூஜையுடன் தில்லியில் இன்று (சனிக்கிழமை) தொடங்கியது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2019-20 ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை ஜூலை 5-ஆம் தேதி தாக்கல் செய்கிறது. பொதுத் தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு பொறுப்பேற்கும் வரையிலான காலகட்டத்திற்கான இடைக்கால பட்ஜெட் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த நிலையில், 2019-2020ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் தயாரிப்பு பணி, அல்வா தயாரிப்பு பூஜையுடன் தில்லியில் இன்று தொடங்கியது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"2019-20 ஆம் நிதியாண்டின் பொது பட்ஜெட்டுக்கான, பட்ஜெட் ஆவணங்கள் தயாரிப்பு மற்றும் அச்சடிப்பு பணி அல்வா பூஜையுடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சி தில்லியில் மத்திய நிதியமைச்சகம் அமைந்துள்ள நார்த் பிளாக்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் நடைபெற்றது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாகுர், நிதியமைச்சக செயலர் சுபாஷ் சந்திர கார்க், வருவாய்த் துறை அமைச்சக செயலர் அஜய் பூஷண் பாண்டே, முதலீடு மற்றும் பொதுச்சொத்துகள் நிர்வாகத் துறையின் செயலர் அதானு சக்கரபோர்த்தி, நிதிச் சேவைகள் செயலர் ராஜீவ் குமார் மற்றும் பட்ஜெட் தயாரிப்பில் தொடர்புடைய அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

ஆண்டுதோறும் பொது பட்ஜெட் தயாரிப்பு மற்றும் அச்சடிப்பு பணி, அல்வா பூஜையுடன் தொடங்கப்படுவது வழக்கம். பூஜைக்குப் பிறகு, பட்ஜெட் ஆவணங்கள் தயாரிப்பு மற்றும் அச்சடிப்பு பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாள் வரை அமைச்சகத்திலேயே தங்கியிருக்க வேண்டும். அவர்கள் தங்கள் வீடுகளுக்குச் செல்ல முடியாது.

தொலைபேசி, மின்னஞ்சல் ஆகியவற்றின் மூலமாகவும் தொடர்புகொள்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனினும், முக்கிய அதிகாரிகள் மட்டும் வீட்டுக்குச் செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com