ராகுலின் சொந்த விருப்பத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்: மணி சங்கர் அய்யர்

"காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தொடர்வதே சிறப்பானது. அதே நேரத்தில், அவரது சொந்த விருப்பங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்' என்று அக்கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் தெரிவித்தார்.
ராகுலின் சொந்த விருப்பத்துக்கு மதிப்பளிக்க வேண்டும்: மணி சங்கர் அய்யர்

"காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தொடர்வதே சிறப்பானது. அதே நேரத்தில், அவரது சொந்த விருப்பங்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்' என்று அக்கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளதாக கூறப்படும் நிலையில், மணி சங்கர் அய்யரின் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதுதொடர்பாக அவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தொடர்வதே சிறப்பானது. அதேசமயம் அவரது சொந்த விருப்பங்களும் மதிக்கப்பட வேண்டும்.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை, நேரு-காந்தி குடும்பத்தைச் சாராதவர் ஏற்க முடியும். ஆனால், கட்சியில் நேரு-காந்தி குடும்பத்தினரின் பங்களிப்பு எப்போதும் போல் தொடர வேண்டும். கட்சிக்குள் தீவிரமான கருத்து வேறுபாடுகள் எழுந்தால், அவற்றை களைவதற்கு நேரு-காந்தி குடும்பத்தினரின் பங்களிப்பே உதவும். கட்சிக்கு அடுத்த தலைவரை தேர்வு செய்வதற்கு, ஒரு மாத கால அவகாசத்தை ராகுல் அளித்துள்ளார். 

இந்த விவகாரம் தொடர்பாக கட்சிக்குள் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ராகுல் காந்தி, அப்பதவியில் தொடர வேண்டும் என்பதற்கு ஆதரவாகவே கட்சியின் மனநிலை உள்ளது. கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா அல்லது ராகுலே தொடர்வாரா என்பதை அறிய ஊடகங்கள் காத்திருக்க வேண்டும்.  

காங்கிரஸ் இல்லாத பாரதம் என்பது மட்டுமன்றி, நேரு-காந்தி குடும்பத்தினர் இல்லாத காங்கிரûஸ உருவாக்குவதும் பாஜகவின் நோக்கம் என்பதை நானறிவேன்.

நேரு-காந்தி குடும்பத்தை சாராதவர்கள், காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்த வரலாறு உள்ளது. அதே பாணியை இப்போதும் கடைப்பிடிக்க முடியும்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியா காந்தி உள்ளார். நாடாளுமன்ற குழுவில் ராகுலும் அங்கம் வகிக்கிறார். 

நேரு-காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் தலைமை பொறுப்பேற்றாலும், காங்கிரஸ் மீண்டெழும் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. காங்கிரஸ் குடும்பத்திலிருந்து பிரிந்து சென்ற கட்சிகளை மீண்டும் ஈர்ப்பதற்காக, "நம்பிக்கையை கட்டமைக்கும் இயக்கத்தை' முன்னெடுக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com