என்ஐஏ அமைப்புக்கு கூடுதல் அதிகாரங்கள்: 2 சட்டங்களில் விரைவில் திருத்தம்

தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) கூடுதல் அதிகாரங்கள் அளிக்கும் வகையில், அந்த அமைப்புத் தொடர்பான 2 சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை அளித்துள்ளது.
என்ஐஏ அமைப்புக்கு கூடுதல் அதிகாரங்கள்: 2 சட்டங்களில் விரைவில் திருத்தம்


தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) கூடுதல் அதிகாரங்கள் அளிக்கும் வகையில், அந்த அமைப்புத் தொடர்பான 2 சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
என்ஐஏ அமைப்புக்கு கூடுதல் அதிகாரங்கள் அளித்து, அந்த அமைப்பை வலுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக, என்ஐஏ சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யும் வகையில், தனித்தனியாக 2 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்யவுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை திங்கள்கிழமை அளித்துள்ளது. இந்த திருத்தங்களில், சைபர் குற்றங்கள், ஆள்கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம், என்ஐஏ அமைப்புக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
இதேபோல், தனி நபர் ஒருவரை பயங்கரவாதியாக முடிவு செய்யும் அதிகாரமும் என்ஐஏ அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மும்பைக்குள் கடல்வழியாக ஊடுருவி நடத்தியத் தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த 2009ஆம் ஆண்டில் என்ஐஏ அமைப்பு உருவாக்கப்பட்டது. 
இந்நிலையில், என்ஐஏ அமைப்புக்கு கூடுதல் அதிகாரங்கள் அளிக்கும் வகையில், மேற்கண்ட 2 சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வருவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஆலோசனை நடத்தி வருகிறது.
இதனிடையே, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் நடக்கும் தேர்தலில் பிரதிநிதி ஒருவர் மூலம் வாக்களிக்க வகை செய்யும் வகையில் மசோதா கொண்டு வருவது குறித்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் திங்கள்கிழமை ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. 
ஆனால் அந்த விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதுதொடர்பான மத்திய உள்துறை அமைச்சகத்தின் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com