சுடச்சுட

  

  அமர்நாத் யாத்திரை: பாதுகாப்பு குறித்து அமித் ஷா ஆலோசனை

  By DIN  |   Published on : 26th June 2019 10:56 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  bidu


  அமர்நாத் யாத்திரை தொடங்கவுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (புதன்கிழமை) பாதுகாப்பு குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். 

  அமர்நாத் யாத்திரை ஜீலை 1-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15-ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த நிலையில், அமித் ஷா இரண்டு நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார். அவர், அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் பங்கேற்றார். இந்த பயணத்தின் போது, ஜம்மு காஷ்மீரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் அமித் ஷா ஆய்வு செய்யவுள்ளார். 

  அமித் ஷாவின் வருகைக்கு முன், வடக்கு ராணுவ லெப்டினென்ட் ஜெனரல் ரன்பீர் சிங், அமர்நாத் யாத்திரை பாதுகாப்புத் தளங்களுக்கு சென்று பாதுகாப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai