மகாராஷ்டிரம்: ரயில் பயணத்தில் 2 எம்எல்ஏக்களிடம் கொள்ளை

மகாராஷ்டிர மாநிலத்தில் 2 எம்எல்ஏக்களிடம் பணம் மற்றும் பிற பொருள்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.


மகாராஷ்டிர மாநிலத்தில் 2 எம்எல்ஏக்களிடம் பணம் மற்றும் பிற பொருள்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் பாந்த்ரே, மாநில சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்கு விதர்பா விரைவு ரயிலில் சென்றார். கல்யாணில் உள்ள ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது, பாந்த்ரே இருக்கும் ரயில் பெட்டியில் ஏறிய மர்ம நபர், அங்கிருந்த கோப்புகள், பணம் இருந்த கைப்பை ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு சென்றார். அவரை பாந்த்ரே விரட்டிச் சென்று பிடிக்க முயன்றார். ஆனால் அந்த நபர் தப்பியோடி விட்டார். கொள்ளையடிக்கப்பட்ட கைப்பையில் ரூ.50,000 ரொக்கமும், ஏடிஎம் அட்டையும் இருந்துள்ளது.
இதேபோல், சிவசேனை எம்எல்ஏ சஞ்சய் ராய்முல்கர் என்பவரும் சட்டப்பேரவை  கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்கு தேவகிரி விரைவு ரயிலில் சென்றார். ரயிலில் சஞ்சய் தூங்கி விட்டதாக தெரிகிறது. அவர் விழித்து எழுந்து பார்த்தபோது, அவரிடம் இருந்த ரூ.10,000 ரொக்கம், அடையாள அட்டை, செல்லிடப் பேசி ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின்பேரில் கல்யாண், சத்ரபதி சிவாஜி ரயில்நிலைய போலீஸார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது பாந்த்ரே கூறுகையில், இது தீவிர பிரச்னை ஆகும். எம்எல்ஏக்கள் பயணம் செய்யும் பெட்டியில் கொள்ளை நடந்துள்ளது. இது சட்டம்-ஒழுங்கு சம்பந்தப்பட்ட விவகாரம். 
எம்எல்ஏக்களுக்கே இந்நிலை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன ஆகும் என்று கேள்வியெழுப்பினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com