இந்தியா, பாகிஸ்தானை அணு ஆயுத நாடுகளாக அங்கீகரிக்கவில்லை: சீனா

இந்தியாவையும், பாகிஸ்தானையும் அணு ஆயுத நாடுகளாக ஒருபோதும் அங்கீகரித்ததில்லை என்று சீனா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியாவையும், பாகிஸ்தானையும் அணு ஆயுத நாடுகளாக ஒருபோதும் அங்கீகரித்ததில்லை என்று சீனா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னுக்கும் இடையே வியத்நாம் தலைநகர் ஹனோயில் நடைபெற்ற இரண்டாவது சந்திப்பு எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் முடிவடைந்தது.
அவர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையில், எதிர்பார்த்ததைப் போல் வட கொரிய அணு ஆயுதங்கள் கைவிடப்படுவது குறித்து தெளிவான செயல்திட்டங்கள் வகுக்கப்படவில்லை.
இந்த நிலையில், இந்தியா, பாகிஸ்தானைப் போல, வட கொரியாவையும் அணு ஆயுத நாடாக சீனா அங்கீகரிக்குமா? என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ காங்கிடம் செய்தியாளர்கள் வெள்ளிக்கிழமை கேள்வியெழுப்பினர்.
அதற்குப் பதிலளித்து லூ காங் கூறியதாவது:
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் அணு ஆயுத நாடு என்ற அந்தஸ்தை ஒருபோதும் வழங்கியதில்லை. இந்த விவகாரத்தில் எங்களது நிலைப்பாடு எப்போதும் மாறியதில்லை. எனவே, வட கொரியாவையும் அணு ஆயுத நாடாக சீனா அங்கீகரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றார் அவர்.
அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாததைக் காரணம் காட்டி, 48 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா இணைவதை சீனா தடுத்து வருகிறது. இந்தச் சூழலில், சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com