கர்நாடகத்தில் காங்கிரஸ்-20, மஜத-8 தொகுதிகளில் போட்டி

கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.


கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் 20 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்.18, 23 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இத்தேர்தலில் காங்கிரஸும், மஜதவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதன்படி, காங்கிரஸ் 20 தொகுதிகளிலும், மஜத 8 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மஜத தேசிய பொதுச் செயலாளர் டானிஷ் அலி ஆகியோரிடையே கையெழுத்திடப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை புதன்கிழமை இரவு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டார். 
மஜதவு போட்டியிடும் தொகுதிகள்: வட கன்னடம், சிக்மகளூரு, சிவமொக்கா, தும்கூரு, ஹாசன், மண்டியா, பெங்களூரு வடக்கு, விஜயபுரா ஆகிய 8 தொகுதிகளில் மஜத போட்டியிடுகின்றன.
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்: சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட், கலபுர்கி, ராய்ச்சூரு, பீதர், கொப்பள், பெல்லாரி, ஹாவேரி, தார்வாட், தாவணகெரே, தென்கன்னடம், சித்ரதுர்கா, மைசூரு, சாமராஜ்நகர், பெங்களூரு ஊரகம், பெங்களூரு மத்திய, பெங்களூரு தெற்கு, சிக்பளாப்பூர், கோலார் ஆகிய 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
தும்கூரு அல்லது பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட எச்.டி.தேவெகெளடா யோசித்து வருவதாக மஜத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொகுதிகள் முடிவாகியுள்ளதைத் தொடர்ந்து, இவற்றில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸும், மஜதவும் மும்முரம் காட்ட தொடங்கியுள்ளன. 
ஏப்.18-ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்கு மார்ச் 19 தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி வரை வாய்ப்பிருக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com