2-ஆம் கட்ட பத்ம விருதுகள்: தமிழகத்தின் சின்னப்பிள்ளை, நர்த்தகி நட்ராஜ் பத்ம ஸ்ரீ வழங்கி கௌரவிப்பு

தில்லியில் 2-ம் கட்டமாக பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது.
2-ஆம் கட்ட பத்ம விருதுகள்: தமிழகத்தின் சின்னப்பிள்ளை, நர்த்தகி நட்ராஜ் பத்ம ஸ்ரீ வழங்கி கௌரவிப்பு

தில்லியில் 2-ம் கட்டமாக பத்ம விருதுகள் வழங்கும் விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்றது.

அதில் தமிழகத்தில் இருந்து மதுரையை சேர்ந்த சமூக சேவகி சின்னப்பிள்ளை, பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நட்ராஜ், மருத்துவத்துறையில் வெங்கடசாமி ஆகியோர் பத்ம ஸ்ரீ விருது பெற்றனர்.  

அறிவியல் மற்றும் பொறியியல் துறைக்காக, விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்ம பூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. எம்டிஹெச் நிறுவனர் மஹாசாய் தரம்பால் குலாடி மற்றும் முதன்முதலில் இமயமலை சிகரம் ஏறி சாதனைப் படைத்த பெண் என்னும் பெருமைக்குரிய பாசேந்திரி பால் ஆகியோருக்கும் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

பிரபல நாட்டுப்புறப் பாடகர் தேஜன் பாய்-க்கு பதம் விபூஷண் விருது வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கௌரவித்தார்.

மேலும் தேநீர் விற்று அதன்மூலம் ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் உள்ள ஏழைக்குழந்தைகளுக்கு பள்ளி நடத்தி வரும் பிரகாஷ் ராவ், கூடைப்பந்து வீராங்கனை பிரஷாந்தி சிங், சமூகநலத்துறையின் ஹெச்.எஸ்.போல்கா, கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர், வில்-அம்பு வீராங்கனை பாம்பைலா தேவி லைஷ்ரம், கால்பந்து வீரர் சுனில் சேத்ரி, தபேலா வித்வான் ஸ்வபன் சௌத்ரி, நடிகர் மனோஜ் பாஜ்பாயி உள்ளிட்டோருக்கும் பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com