ரூ.458 கோடி நிலுவைத் தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்கினார் அனில் அம்பானி

எரிக்ஸன் நிறுவனத்துக்கு தர வேண்டிய பாக்கித் தொகை ரூ.458.77 கோடியை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பட்டுவாடா செய்துவிட்டதாக திங்கள்கிழமை தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரூ.458 கோடி நிலுவைத் தொகையை எரிக்ஸன் நிறுவனத்துக்கு வழங்கினார் அனில் அம்பானி


எரிக்ஸன் நிறுவனத்துக்கு தர வேண்டிய பாக்கித் தொகை ரூ.458.77 கோடியை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பட்டுவாடா செய்துவிட்டதாக திங்கள்கிழமை தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தகவல்கள் மேலும் தெரிவிப்பதாவது:
தொலைத் தொடர்புத் துறையில் இணைந்து செயல்பட்ட வகையில்,  ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த மொபைல் தயாரிப்பு நிறுவனமான எரிக்ஸனுக்கு ரூ.458.77 கோடியை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வழங்க வேண்டியிருந்தது. இதற்கிடையே, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி, எரிக்ஸனுக்கு தர வேண்டிய தொகையை திரும்ப செலுத்தாமல் இருந்து வந்தார்.
நிலுவைத் தொகையைப் பெற எரிக்ஸன் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அனில் அம்பானி வேண்டுமென்றே தொகையை திருப்பிச் செலுத்தாமல் இருப்பதாகவும், 4 வாரங்களுக்குள் எரிக்ஸனுக்கு தர வேண்டிய பாக்கியை அவர் திருப்பித் தர வேண்டும் என்று  உத்தரவிட்டது. அப்படி திருப்பிச் செலுத்த தவறும்பட்சத்தில் அனில் அம்பானி 3 மாதம் சிறை தண்டனையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தது. 
இந்த நிலையில், எரிக்ஸனுக்கு தர வேண்டிய பாக்கித் தொகையான ரூ.458.77 கோடியை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் திருப்பி செலுத்தி விட்டதாக திங்கள்கிழமை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், அது குறித்த விரிவான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இது தொடர்பாக,  எரிக்ஸன் நிறுவனமும் உடனடியாக கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com