நாட்டு மக்களை காவலாளியாக்க விரும்புகிறார் மோடி

ஒட்டுமொத்த தேசத்தையும் காவலாளியாக்க விரும்புகிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரையில்
பிரதமர் நரேந்திர மோடியை செளக்கிதார் (காவலாளி) என்று  விமர்சித்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராக நாங்களும் காவலாளிகள்தான் என தில்லியில் புதன்கிழமை திரண்ட பாஜக வினர்.
பிரதமர் நரேந்திர மோடியை செளக்கிதார் (காவலாளி) என்று  விமர்சித்த அரசியல் கட்சித் தலைவர்களுக்கு எதிராக நாங்களும் காவலாளிகள்தான் என தில்லியில் புதன்கிழமை திரண்ட பாஜக வினர்.


ஒட்டுமொத்த தேசத்தையும் காவலாளியாக்க விரும்புகிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் கேஜரிவால் தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: 
தேசம் முழுவதையும் காவலாளியாக்க விரும்புகிறார் மோடி. நீங்கள் உங்கள் குழந்தைகளை காவலாளியாக்க விரும்பினால் மோடிக்கு வாக்களியுங்கள். ஆனால், நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி தந்து மருத்துவர், பொறியாளர், வழக்குரைஞராக உருவாக்க விரும்பினால், நேர்மையானவர்களின் கட்சியான ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள் என அதில் கேட்டுக் கொண்டுள்ளார். 
ஒத்துழைப்பு அளிக்கவில்லை: தனது சுட்டுரைப் பக்கத்தில் மற்றொரு பதிவில் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியின் பதிவை இணைத்து முதல்வர் கேஜரிவால், தில்லி மக்களின் ஒவ்வொரு பணியையும் தடுத்து நிறுத்துகிறீர்கள். பள்ளி, மருத்துவமனை, சிசிடிவி, மொஹல்லா கிளினிக் போன்ற திட்டங்களை தடுக்கிறீர்கள். தில்லி மக்களுக்கான பணியை மேற்கொள்வதற்காக உங்கள் முன் அழுது முறையிட்டோம். 10 தினங்கள் பட்டினிப் போராட்டமும் நடத்தப்பட்டது. இங்கே என்ன ஒத்துழைப்பு இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டிருந்த சுட்டுரைப் பதிவில், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பு அளித்து, அனைத்து மக்களுக்கும் நல்லது நடக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் பணியாற்ற விரும்புகின்றன. மக்கள் நலன் முக்கியம் எனும் கொள்கையின் அடிப்படையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மோடி அரசு அமல்படுத்தியது. எனினும், மேங்கு வங்கம், தில்லி, ஒடிஸா மாநிலங்கள் அதை அமல்படுத்த மறுத்து வருகின்றன என்று தெரிவித்திருந்தார். 
பொய்யரை விட காவலாளியே சிறந்தது - பாஜக பதிலடி
வாழ்வில் காவலாளிகள்தான் கடுமையாக உழைத்து வருகிறார்கள். ஆகையால், தில்லி முதல்வர் கேஜரிவால் போன்று பெரிய பொய்யராக இருப்பதைவிட காவலாளியாக இருப்பதே சிறந்தது என்று தில்லி பாஜக தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடிக்கு எதிராக கேஜரிவால் தெரிவித்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தில்லி பாஜக சுட்டுரையில் புதன்கிழமை தெரிவித்ததாவது:
ஊழல், சமூக அவலங்களுக்கு எதிராக போராட நாட்டு மக்கள் காவலாளிகளைப் போல் மாற வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார். ஆனால், கேஜரிவால் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லை. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அவரால் நல்லதை எதையும் செய்ய முடியவில்லை.
காவலாளிகள்தான் கடுமையாக உழைப்பவர்கள். ஆகையால், தில்லி முதல்வர் கேஜரிவால் போன்று பெரிய பொய்யராக இருப்பதைவிட காவலாளியாக இருப்பதே சிறந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com