மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை: மாயாவதி அறிவிப்பு

வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியில்லை: மாயாவதி அறிவிப்பு


வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, லக்னெளவில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது:
தற்போதைய சூழலைக் கருதியும், நாட்டின் தேவையை உணர்ந்து, கட்சியின் நலனை மனதில் கொண்டும், வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். நான் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்ததற்கு இதுவே காரணம்.
நாடாளுமன்றத்துக்கு நான் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால், கட்சியின் எம்.பி. ஒருவரை பதவி விலகச் செய்து விட்டு, அந்தத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆவேன்.
மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிட்டால், நான் தடுத்தாலும், நான் போட்டியிடும் தொகுதியில் கட்சித் தொண்டர்கள் தீவிரமாகப் பணியாற்றுவார்கள். அது, மற்ற தொகுதிகளின் பிரசாரத்தை பாதிக்கக் கூடும். எனவே, என்னுடைய தனிப்பட்ட வெற்றியை விட ஒவ்வொரு தொகுதியிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெற வேண்டியது முக்கியமானதாக உள்ளது. உத்தரப் பிரதேசத்தில், சமாஜவாதி-பகுஜன் சமாஜ்-ராஷ்ட்ரீய லோக் தளம் கூட்டணிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த விரும்பவில்லை என்றார் அவர்.
மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த மாயாவதி, தலித் சமூகத்தினர் மீதான தாக்குதல் குறித்து மாநிலங்களவையில் விவாதிப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறி தனது எம்.பி. பதவியை கடந்த 2017-ஆம் ஆண்டு ராஜிநாமா செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com