கர்நாடக முதல்வராவதற்கு பாஜக தலைவர்களுக்கு ரூ.1800 கோடி லஞ்சம் கொடுத்தாரா எடியூரப்பா?

கர்நாடகாவின் முதல்வராக தான் பதவியேற்பதற்காக பாஜக தலைவர்களுக்கு ரூ.1800 கோடியை லஞ்சமாக எடியூரப்பா வழங்கினார் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் பகீர் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக முதல்வராவதற்கு பாஜக தலைவர்களுக்கு ரூ.1800 கோடி லஞ்சம் கொடுத்தாரா எடியூரப்பா?

கர்நாடகாவின் முதல்வராக தான் பதவியேற்பதற்காக பாஜக தலைவர்களுக்கு ரூ.1800 கோடியை லஞ்சமாக எடியூரப்பா வழங்கினார் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் பகீர் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

தி கேரவான் என்ற இதழ் வெளியிட்ட செய்திகளை சுட்டிக்காட்டிய கர்நாடக செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா இன்று செய்தியாளர்களிடம் இது குறித்து முக்கியத் தகவல்களையும், ஆவணங்களின் நகல்களையும் வெளியிட்டார்.

2009ம் ஆண்டு கர்நாடகாவின் முதல்வராக தான் பதவியேற்றுக் கொள்வதற்காக, பாஜக தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு தொகை அளிக்கப்பட்டது என்பது குறித்து எடியூரப்பா எழுதிய டைரியின் நகலும் வெளியிடப்பட்டது.

வருமான வரித்துறை பறிமுதல் செய்த எடியூரப்பாவின் டைரியில் இந்த தகவல்கள் எழுதப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அதில், 
அத்வானி - ரூ. 50 கோடி
ராஜ்நாத் சிங் - 100 கோடி
நிதின் கட்காரி- 150 கோடி
முரளி மனோகர் ஜோஷி - 50 கோடி
அருண் ஜேட்லி - 150 கோடி வழங்கப்பட்டிருப்பதாக எழுதப்பட்டுள்ளது.

அது மட்டுமல்லாமல், வழக்கில் வாதாடிய வழக்குரைஞர் மற்றும் நீதிபதிக்கும் பணம் கொடுக்கப்பட்டதாகவும், நிதின் கட்கரியின் மகன் திருமணத்துக்கும், பாஜக மத்தியக் குழுவுக்கு ரூ.1000 கோடி பணம் அளித்ததாகவும் எடியூரப்பா தன் கைப்பட எழுதி கையெழுத்திட்டுள்ளார்.

இந்த நகலை வெளியிட்டுப் பேசிய செய்தித் தொடர்பாளர், இது வெறும் கர்நாடகாவின் பிரச்னை மட்டும் அல்ல, இது ஒட்டு மொத்த தேசத்துக்கான பிரச்னையும் கூட, ரூ.1,800 என்பது ஒரு சிறிய தொகை அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com