2004-இல் சொத்து மதிப்பு ரூ. 55 லட்சம்; 2014-இல் ரூ. 9 கோடி.. எப்படி? ராகுலுக்கு பாஜக அமைச்சர் கேள்வி

2004-ஆம் ஆண்டில் ரூ. 55 லட்சமாக இருந்த சொத்து மதிப்பு 2014-ஆம் ஆண்டில் எப்படி ரூ. 9 கோடியானது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். 
2004-இல் சொத்து மதிப்பு ரூ. 55 லட்சம்; 2014-இல் ரூ. 9 கோடி.. எப்படி? ராகுலுக்கு பாஜக அமைச்சர் கேள்வி


2004-ஆம் ஆண்டில் ரூ. 55 லட்சமாக இருந்த சொத்து மதிப்பு 2014-ஆம் ஆண்டில் எப்படி ரூ. 9 கோடியானது என்று ராகுல் காந்திக்கு  மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். 

மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தல் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்து வருகின்றனர். ஒரு சில கட்சிகள் தங்களது பிரசாரங்களை தொடங்கிவிட்டன. ஆளும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் ஒருவரை ஒருவர் மாறி விமரிசனம் செய்து பிரசாரங்கள் செய்து வருகின்றன. 

இந்நிலையில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக, அவர் பேசியதாவது, 

"நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளம் தான் ராகுல் காந்தியின் வருமானம். மற்ற வருமானத்தின் மூலதனம் குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. 2004-ஆம் ஆண்டு வேட்புமனு தாக்கலில், தனது சொத்து மதிப்பை ரூ. 55,38,123 என குறிப்பிட்டிருந்தார். 2009-இல், அது ரூ. 2 கோடியானது. 2014-இல் ரூ.9 கோடி ஆனது. உங்களுடைய சொத்து மதிப்பு ரூ. 55 லட்சத்தில் இருந்து எப்படி ரூ.9 கோடி ஆனது?" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com