ஆந்திர முதல்வர் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஆந்திர முதல்வர் வேட்பாளர்களாக களமிறங்கவுள்ள பிரதான 3 பேரின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
ஆந்திர முதல்வர் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஆந்திர முதல்வர் வேட்பாளர்களாக களமிறங்கவுள்ள பிரதான 3 பேரின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் ஆளும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், அம்மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு, எதிர்கட்சியாக உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் புதிதாக உதயமாகியுள்ள நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த 3 கட்சிகளின் முக்கிய தலைவர்களும் ஆந்திர மாநிலத்தில் தங்கள் தலைமையிலான அரசு அமையும் என்று பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும் இந்த கட்சிகளில் எது ஆட்சியமைத்தாலும் இந்த மூவரில் ஒருவர் தான் அம்மாநில முதல்வராவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், அங்கு நடைபெறவுள்ள சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. இதில் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு தொடர்பான விவரங்கள் அளிக்க வேண்டும். அதனடிப்படையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சொத்து மதிப்பு ரூ.574 கோடி என்ற தகவல் வெளியானது.

அதுபோன்று ஜெகன் மோகன் ரெட்டி, ரூ.538 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். நடிகர் பவன் கல்யாண் தன்னிடம் ரூ.52 கோடி மதப்பிலான சொத்து மட்டுமே இருப்பதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். இது 3 பேரில் இருவரிடம் உள்ள மொத்த சொத்தின் 10 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே நெல்லூர் தொகுதியில் போட்டியிடும் ஆந்திர அமைச்சரும், நாராயணா குழு நிறுவனத் தலைவருமான பி.நாராயணா, தன்னிடம் ரூ.667 கோடி மதிப்பிலான சொத்து இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com