பாஜகவில் இணைந்தார் கௌதம் கம்பீர்

பாஜகவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் வெள்ளிக்கிழமை தன்னை இணைத்துக் கொண்டார். அக்கட்சியைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் அருண்
பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்த கௌதம் கம்பீரை வரவேற்கும் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா.
பாஜகவில் வெள்ளிக்கிழமை இணைந்த கௌதம் கம்பீரை வரவேற்கும் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா.


பாஜகவில் முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் வெள்ளிக்கிழமை தன்னை இணைத்துக் கொண்டார். அக்கட்சியைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார்.
பின்னர் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். கௌதம் கம்பீர், புது தில்லி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவில் சேர்ந்தது குறித்து கௌதம் கம்பீர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை என்னை மிகவும் கவர்ந்தது. கட்சியின் ஓர் உறுப்பினராக இருந்து, நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன். எனக்கு இந்த வாய்ப்பை அளித்த பாஜகவுக்கு நன்றி என்றார்.
கௌதம் கம்பீர் பாஜகவில் சேர்ந்தது குறித்து அருண் ஜேட்லி கூறுகையில், பாஜகவில் கம்பீர் இணைந்திருப்பது மிகவும் முக்கியமானதாகும். அவர் தில்லியில் வளர்ந்தவர். இங்குதான் கல்வி கற்றார். தில்லிவாசிகள் குறித்து நன்கு அறிந்தவர். அவரது திறமையைக் கட்சி முடிந்தவரை பயன்படுத்தும். மக்களவைத் தேர்தலில் அவர் வேட்பாளராக நிறுத்துவது குறித்து கட்சி உரிய நேரத்தில் முடிவு எடுக்கும். கடந்த 10 ஆண்டுகளில் பாஜக தனது தொண்டர்கள் தளத்தை விரிவுபடுத்தியுள்ளது. தொண்டர்கள் சார்ந்த கட்சி என அழைக்கப்பட்ட பாஜக, தற்போது தொண்டர்கள் அதிகம் நிறைந்த கட்சியாக உருவெடுத்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com