ரூ.895 கோடி சொத்து மதிப்பு கொண்ட காங்கிரஸ் வேட்பாளர்!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தனக்கு ரூ.895 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். 
ரூ.895 கோடி சொத்து மதிப்பு கொண்ட காங்கிரஸ் வேட்பாளர்!

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தனக்கு ரூ.895 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். தெலங்கானா மாநிலம் சேவல்லா மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக கொண்டா விஷ்வேஷ்வர் ரெட்டி அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் தேர்தலில் போட்டியிட வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதில் தனக்கு ரூ.895 கோடி மதிப்புள்ள சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். அசையும் சொத்து ரூ.223 கோடியும் - அசையா சொத்து ரூ.36 கோடியும், தனது மனைவியும், அப்பல்லோ இணை நிர்வாக இயக்குநருமான சங்கீதா ரெட்டியின் அசையும் சொத்து ரூ.613 கோடியும் - அசையா சொத்து ரூ. 1.81 கோடியும், மகனின் அசையும் சொத்து ரூ.20 கோடி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், குடும்ப உறுப்பினர்கள் யாரிடமும் கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட எந்த வாகனமும் இல்லை என அதில் தெரிவித்துள்ளார்.  

முன்னதாக, 2014-ல் நடைபெற்ற தேர்தலில் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது அவருடைய சொத்து மதிப்பு ரூ.528 கோடியாக இருந்தது. தெலுங்கு மொழி பேசும் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அதிகளவிலான சொத்து உடைய வேட்பாளராக முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com