காஷ்மீரில் பிஎஸ்ஏ சட்டத்தின்கீழ் முக்கிய குற்றவாளி கைது

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜெளரி மாவட்டத்தில் முக்கிய குற்றவாளி ஒருவர், பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (பிஎஸ்ஏ) கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜெளரி மாவட்டத்தில் முக்கிய குற்றவாளி ஒருவர், பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (பிஎஸ்ஏ) கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். 
ரஜெளரி மாவட்டத்தில் பல்வேறு குற்றச்செயலில் ஈடுபட்ட ஹாரூண் ரஷீத் என்பவரை பொது பாதுகாப்புச்சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிடக்கோரி மாவட்ட காவல்துறை, மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தது. அதன்பேரில் அவரை கைது செய்ய மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டதையடுத்து, அவர் பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார். 
இதுகுறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் யோகல் மன்ஹாஸ் கூறியதாவது: 
ஹாரூண் ரஷீத், தற்போது ஜம்முவில் உள்ள கோட் பல்வால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 7 குற்றச்செயல்களில் அவருக்கு தொடர்புள்ளதாக ரஜெளரி மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 
சட்டத்துக்கு புறம்பான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் அவர்மீது பொது பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதுபோக, இன்னும் சில நபர்களை ரகசியமாக கண்காணித்து வருகிறோம். சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீதும் இதேபோன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com