வாக்கு ஒப்புகை சீட்டு முறையை அதிகரிக்கவும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை

வாக்கு ஒப்புகை சீட்டு முறையை அதிகரிப்பது தொடர்பாக மார்ச் 28-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
வாக்கு ஒப்புகை சீட்டு முறையை அதிகரிக்கவும்: தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை

வாக்கு ஒப்புகை சீட்டு முறையை அதிகரிப்பது தொடர்பாக மார்ச் 28-ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு மத்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாக்கு இயந்திரங்களில் யாருக்கு வாக்களித்தோம் என்ற ஒப்புகை சீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டு ஆங்காங்கே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மக்களவை மற்றும் சில மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், வாக்கு இயந்திரங்களில் இந்த ஒப்புகை சீட்டு முறையை 50 சதவீதம் அதிகரிக்க வேண்டி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 21 எதிர்கட்சிகளின் தலைவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா ஆகியோர் அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வாக்கு ஒப்புகை சீட்டு முறையை அதிகரிப்பது தொடர்பாக மார்ச் 28-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதுமட்டுமல்லாமல், இதுபோன்ற முதிய முயற்சிகள் திருப்தியளிக்கக்கூடிய வகையில் அமைய வேண்டும். புதிய மாற்றங்களுக்காக எந்த தனிப்பட்ட நிறுவனங்களும் தயாராக இருக்க வேண்டும். அனைத்திலும் மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்புகள் நிறைந்துள்ளன. எனவே வாக்கு ஒப்புகை சீட்டு முறை அதற்கு ஒரு உதாரணமாக அமைய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com