சிங்கப்பூரில் இந்தியருக்கு 8 வாரங்கள் சிறை

சிங்கப்பூர் விமான நிலையத்தில் பயணி ஒருவரின் பைகள் எடையைக் குறைத்து மதிப்பிட லஞ்சம் வாங்கியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், இந்தியருக்கு 8 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


சிங்கப்பூர் விமான நிலையத்தில் பயணி ஒருவரின் பைகள் எடையைக் குறைத்து மதிப்பிட லஞ்சம் வாங்கியதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், இந்தியருக்கு 8 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் சாங்கி விமானநிலையத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஹிதேஷ்குமார் சந்துபாய் படேல் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த விமானப் பயணியான கோபால் கிருஷ்ண ராஜு என்பவரின் உடைமைகளுக்கான எடையைக் குறைத்துக் காண்பிப்பதற்காக, அவரிடம் லஞ்சம் பெற்றதாக ஹிதேஷ்குமார் மீது குற்றச்சாட்டு எழுந்தது. கோபால் கிருஷ்ண ராஜு, சிங்கப்பூரில் தங்கத்தைக் குறைந்தவிலைக்கு வாங்கி, அதை இந்தியாவில் அதிகவிலைக்கு விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அவருக்கு உதவும் வகையில், இந்தியாவுக்குச் செல்லும் மற்ற பயணிகளிடம் ஹிதேஷ்குமார் தங்கத்தைக் கொடுத்து, அதை கிருஷ்ண ராஜுவிடம் சேர்த்துவிடும்படி கூறியுள்ளார். இதற்காகக் கடந்த 2016-ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை, ஹிதேஷ்குமாருக்கு, கிருஷ்ண ராஜு லஞ்சம் கொடுத்துள்ளார். சிங்கப்பூர் காவல் துறையினர் நிகழ்த்திய அதிரடி சோதனையில் ஹிதேஷ்குமார் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், சிங்கப்பூரில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தப்பட்ட ஹிதேஷ்குமாருக்கு, 8 வாரங்கள் சிறைத் தண்டனையும், சுமார் ரூ.41,000 அபராதமும் விதிக்கப்பட்டது. 
இதேபோன்ற புகார்களில், ஏற்கெனவே இரண்டு இந்தியர்களுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் சிறைத் தண்டனை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com