ரமலான், வெயில் காரணமாக வாக்குப்பதிவை காலை 5.30 மணிக்குத் தொடங்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை

வெயில் காரணமாக மக்களவை தேர்தலுக்கான அடுத்த கட்ட வாக்குப்பதிவை காலை 5.30 மணிக்குத் தொடங்கலாமே என்று பொது நல வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
ரமலான், வெயில் காரணமாக வாக்குப்பதிவை காலை 5.30 மணிக்குத் தொடங்க உச்ச நீதிமன்றம் பரிந்துரை


புது தில்லி: வெயில் காரணமாக மக்களவை தேர்தலுக்கான அடுத்த கட்ட வாக்குப்பதிவை காலை 5.30 மணிக்குத் தொடங்கலாமே என்று பொது நல வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

பொது நல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தலைமைத் தேர்தல் ஆணையம் இந்த பரிந்துரையை பரிசீலிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். 

ரமலான் மாதம் தொடங்கவிருப்பதால் வாக்குப்பதிவை முன்கூட்டியே தொடங்க வைக்கப்பட்ட பரிந்துரையை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், மீதமுள்ள 3 கட்ட வாக்குப்பதிவின் நேரத்தை மாற்றுவது குறித்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

வெயில் காரணமாக மக்களவை தேர்தலுக்கான அடுத்த கட்ட வாக்குப்பதிவை காலை 5.30 மணிக்குத் தொடங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் காலை 7 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை வாக்குப்பதிவை நடத்துவதற்கு பதில் காலை 5.30 மணிக்கே வாக்குப்பதிவை தொடங்க உத்தரவிடக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

மேலும், ரம்ஜான் தொழுகை மாதமும் தொடங்கவிருப்பதால் காலை 5.30க்கே வாக்குப்பதிவை தொடங்குவது சாதகமாக இருக்கும். வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மதியத்துக்குப் பிறகு மக்கள் வாக்களிக்க ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com