சுடச்சுட

  

  ராகுலின் இங்கி. வங்கிக் கணக்கு இதுதான்! சுப்ரமணியன் சுவாமி வெளியிட்ட தடயம் 

  By DIN  |   Published on : 02nd May 2019 08:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rahul_samy

   

  காங்கிரஸ் தலைவர் ராகுல், இந்தியா மட்டுமின்றி இங்கிலாந்தின் குடியுரிமையையும் பெற்றுள்ளதாக சுப்ரமணியன் சுவாமி, மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் தெரிவித்தார்.

  அவர் அளித்த புகாரின் அடிப்படையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் இரட்டை குடியுரிமை குறித்து 2 வாரங்களில் தெளிவான விளக்கம் தரும்படி மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு, இங்கிலாந்து நாட்டின் வங்கிக் கணக்கு தொடர்பான தடயம் ஒன்றையம் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி புதன்கிழமை வெளியிட்டுள்ளார். அதில் காங்கிரஸ் தலைவர் ராகுலின் பெயர் ரௌல் வின்ஸி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  இங்கிலாந்தின் புகழ்பெற்ற பார்க்லீஸ் வங்கியில் ரௌல் வின்ஸி என்ற பெயரில் 504664922071640796 என்னும் இந்த வங்கிக் கணக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai