காஷ்மீருக்குள் தாக்குதல் நடத்த முயன்ற நாள்: துரித பதிலடி தினமாக அனுசரிக்க பாகிஸ்தான் முடிவு

இந்திய விமானப்படை தாக்குதலை தொடர்ந்து காஷ்மீருக்குள் பாகிஸ்தான் விமானங்கள் ஊடுருவித் தாக்குதல் நடத்த முயன்ற தினத்தை துரித பதிலடி தினமாக அனுசரிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. 


இந்திய விமானப்படை தாக்குதலை தொடர்ந்து காஷ்மீருக்குள் பாகிஸ்தான் விமானங்கள் ஊடுருவித் தாக்குதல் நடத்த முயன்ற தினத்தை துரித பதிலடி தினமாக அனுசரிக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. 
ஜம்முகாஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பிப்ரவரி 14ஆம் தேதி ஜெய்ஷ்ஏமுகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைத் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இந்திய விமானப்படையினர் பிப்ரவரி 26ஆம் தேதி பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியான பாலாகோட்டில் அமைக்கப்பட்டுருந்த பயங்கரவாதிகள் முகாம் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி தரும் வகையில், அடுத்த தினமான பிப்ரவரி 27ஆம் தேதி பாகிஸ்தான் விமானங்கள் காஷ்மீருக்குள் ஊடுருவி அத்துமீறி தாக்குதலில் ஈடுபடுவதற்கு முயன்றது.  
இதையடுத்து, பாகிஸ்தான் விமானங்கள் மீது இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியதில், பாகிஸ்தானுக்கு சொந்தமான எஃப்16 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்தியத் தரப்பில் மிக்21 ரக விமானம் சுடப்பட்டதில் அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானிடம் சிக்கி கொண்டார். 
இதன் தொடர்ச்சியாக, நல்லெண்ண நடவடிக்கையாக அபிநந்தனை பாகிஸ்தான் அரசு விடுவித்தது. 
இதனிடையே, காஷ்மீருக்குள் பாகிஸ்தான் விமானப்படை நுழைந்து தாக்குதல் நடத்த முயன்ற தினத்தை துரித  பதிலடி தினமாக அனுசரிக்கப்படும் என அந்நாட்டின் மூத்த விமானப்படை மூத்த அதிகாரி முஜாஹித் அன்வர் கான் தெரிவித்துள்ளார்.   
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: 
பிப்ரவரி 27ஆம் தேதி பாகிஸ்தான் விமானப்படை எதிரிகளின் முகாமுக்குள் ஊடுருவி பழிவாங்கும் வகையில் பதிலடி தாக்குதல் நடத்தியது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த தினத்தை துரித பதிலடி தினமாக கொண்டாட பாகிஸ்தான் விமானப்படை முடிவு செய்துள்ளது.
இந்த தாக்குதல் மூலமாக எதிரிகளின் மோசமான தாக்குதல் நடவடிக்கைகள், பாகிஸ்தான் விமானப்படையின் திறமையான செயல் வல்லமை காரணமாக தவிடுபொடியாக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com