மோடியின் பேச்சில் நெறிமுறை மீறல் இல்லை: தேர்தல் ஆணையம்

பாலாகோட் விமானப் படை தாக்குதல், புல்வாமா தாக்குதல் ஆகிய சம்பவங்களை குறிப்பிட்டு பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதில் தேர்தல் நடத்தை நெறிமுறை மீறல் இல்லை என்று தேர்தல்
மோடியின் பேச்சில் நெறிமுறை மீறல் இல்லை: தேர்தல் ஆணையம்


பாலாகோட் விமானப் படை தாக்குதல், புல்வாமா தாக்குதல் ஆகிய சம்பவங்களை குறிப்பிட்டு பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதில் தேர்தல் நடத்தை நெறிமுறை மீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் புதன்கிழமை அறிவித்தது. 
மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் கடந்த மாதம் 9-ஆம் தேதி பாஜக தேர்தல் பேரணியில் பங்கேற்ற பிரதமர் மோடி, முதல் முறை வாக்காளர்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். பாலாகோட்டில் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப் படை வீரர்களுக்காக உங்களது வாக்குகளை செலுத்துவீர்களா; புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலில் பலியான துணிச்சல் மிக்க தியாகிகளுக்கு உங்களது வாக்குகளை அர்ப்பணிப்பீர்களா என்று பேசினார். 
மோடியின் இந்தப் பேச்சு, பாதுகாப்புப் படையினரின் பெயரைப் பயன்படுத்தி பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உத்தரவை மீறியதாகக் கூறி, காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது.
அதன்பேரில், மோடியின் பிரசாரம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மகாராஷ்டிர தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அவர்கள் அளித்த அறிக்கையை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், மோடியின் பேச்சில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களோ, தேர்தல் நடத்தை நெறிமுறைகளோ மீறப்பட்டதாகத் தெரியவில்லை என்று அறிவித்தது. 
கமல் நாத்தும் மீறவில்லை: அதேபோல், பிரதமர் மோடியின் சிறுவயதை குறிப்பிட்டு மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் பேசியதிலும் நடத்தை நெறிமுறை மீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், காந்த்வா மாவட்டத்தில் உள்ள ஹர்சுத் பகுதியில் கடந்த மாதம் 14-ஆம் தேதி நடைபெற்ற காங்கிரஸ் பிரசார பேரணியில் பேசிய முதல்வர் கமல்நாத், மோடி குழந்தையாக இருந்தபோதே, ஜவாஹர்லால் நேருவும், இந்திரா காந்தியும் நாட்டின் பாதுகாப்புப் படைகளை கட்டமைத்தவர்கள் என்று பேசியிருந்தார். 
அவ்வாறு அவர் பேசியதும் தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மீறியதாக இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com