மோடியை விமரிசித்த சிறார்கள்: அதிர்ச்சியடைந்த பிரியங்கா என்ன செய்தார் தெரியுமா?

அமேதியில் பிரசாரம் செய்யச் சென்ற பிரியங்காவை சூழ்ந்து கொண்ட சிறார்கள், பாஜகவுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் கோஷமிட்டு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
மோடியை விமரிசித்த சிறார்கள்: அதிர்ச்சியடைந்த பிரியங்கா என்ன செய்தார் தெரியுமா?


அமேதியில் பிரசாரம் செய்யச் சென்ற பிரியங்காவை சூழ்ந்து கொண்ட சிறார்கள், பாஜகவுக்கு எதிராகவும், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் கோஷமிட்டு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.

உத்தரப் பிரதேச மாநிலம், அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்து நேற்று பிரசாரம் செய்தார்.

அப்போது அவரை சூழ்ந்து கொண்ட சிறார்கள் கூட்டம், சௌகிதார் சோர் ஹை என்று மோடியை விமரிசித்து குரல் எழுப்பினர். இதனை சற்றும் எதிர்பாராத பிரியங்கா, அதிர்ச்சியில் வாயடைத்து நின்றார். அப்போது, சிறார்களை அவ்வாறு சொல்ல வேண்டாம் என்று கூறிவிட்டு நல்ல பிள்ளைகளாக இருங்கள் என்று அறிவுரை வழங்கினார்.

இதனைக் கேட்ட சிறார்கள் ராகுல் காந்தி வாழ்க என்று கோஷமிட்டனர். இதைக் கேட்டதும் பிரியங்கா சந்தோஷப்பட்டார். மகிழ்ச்சியோடு அப்பகுதியில் இருந்து பிரியங்கா கிளம்பினார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரசாரத்துக்குப் பிறகு அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதால், சமாஜவாதிபகுஜன் சமாஜ்ஆர்எல்டி கூட்டணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பாஜகவுக்குதான் பாதிப்பு ஏற்படும். ஏனெனில், தேர்தலில் வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்கள் அல்லது பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வேட்பாளர்களுக்குதான் காங்கிரஸ் தேர்தலில் வாய்ப்பளித்துள்ளது.

வாராணசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவதில் எனக்கு எந்த பயமும் கிடையாது. யாரைக் கண்டும் எனக்கு பயம் கிடையாது. பயமிருந்தால் நான் வீட்டுக்குள்ளேயே இருந்திருப்பேன். அரசியலுக்கு வந்திருக்க மாட்டேன். அரசியலுக்கு நல்லது செய்யவே நான் வந்துள்ளேன். இந்தத் தேர்தலை 2022ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கு காங்கிரஸை தயார்படுத்தும் செயலாக கருதி செயல்படவில்லை. மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே காங்கிரஸ் செயல்படுகிறது என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com